திங்கள், டிசம்பர் 14

The untouchable country -யாகவா தொடர வேண்டும் என் பாரத தேசம்?


எத்தனயோ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சாதி எதிர்ப்பு இன்றும் அதன் தொடக்க நிலையில் தான் இருந்துகொண்டுருக்கின்றது,சமய சான்றோர்(வெகு குறைவு) மற்றும் பகுத்தறிவுவாதிகள் தொடங்கிய இந்த எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள் மட்டுமே காலம் காலமாக முன்னின்று இதனை ஒரு சமூக பிரச்சனையென்றும், தனிமனித சுயமரியாதையென்றும் கூறிவருகிறார்கள்.உண்ண உணவு,உடுத்த உடை, இருக்க இடம் என்ற நிலையிலிருந்து சுயமரியாதை வாழ்வும் என்கின்ற நிலைக்கு மாறி வெகு நாட்களாகின்றன.வளர்ந்து வருகின்ற பொருளாதர சூழ்நிலையில் தனி மனிதன் உணவு,இடம்,உடை இவையாவனவும் பெற்றுவிடமுடியும் என்ற நிலையிருந்தும் தான் பிறப்பால் இழிவுபடுத்தபடுகின்றோம்,சமூக கட்டமைப்பிலிருந்து ஒதுக்கபடுகின்றோம் என்ற நிலைவரும்போது எந்த எல்லைக்கும் சென்று பெற்றுக்கொள்ள முழு சுதந்திரம் உள்ளது,அதை தடுக்கவோ,எதிர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை.ஆனால் இந்த சாதி எதிர்ப்பு எங்கிருந்து தொடங்கபட வேண்டுமோ அங்கிருந்து தொடங்கப்படவில்லை.


பெருவாரியான இந்துக்கள் இந்த இழிநிலை விரும்பவில்லை மற்றும் அதிலிருந்து விடுபட தாங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்கின்றபோது அதை சரி செய்ய வேண்டிய பொருப்பு முழுமையாக இந்துக்களின் காவலன் என்றும்,சமய சான்றோர் என்றும்,பெருபான்மை இன மக்களுக்கு அரசியல் ஒற்றுமை மற்றும் ஆட்சி அதிகாரம் பெற்றுகொடுக்க போகின்றோம் என்று கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகளும் இதனை முழுபலத்தோடு எதிர்க்கவில்லை என்கின்றபோது என்னை போன்றவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கின்றது.இதைத்தான் இவர்கள் வருங்கால சந்ததியருக்கு கொண்டுபோக போகின்றார்களா? சிறு,சிறு வெவ்வேறான கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த இன குழுக்கலாக தனி தன்மையோடு வாழ்ந்து வந்த மக்களை இந்துக்கள் என்று அடையாளபடுத்தி,ஒருமுகபடுத்தி தமக்கென்று பழமையான கலாச்சாரம் உண்டென்றும்,அப்பனுக்கும்,குப்பனுக்கும் போர் நடைபெற்றபொழுது அருளப்பட்டது என்று கூறி எங்கள் கலாச்சாரத்துடன் ஒத்துபோகதை தினித்து இதுவும் நம் கலாச்சாரம் என்றார்கள் சரி ஏற்றுகொள்வோம் ஆனால் சுயமரியாதையுடனும் நாகரிகமாகவும் வாழ முயலும் மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்களை தொடர செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?.



வீடியோ:கீற்று வலைதளம் மற்றும் தலித் மீடியா நெட்வொர்க்,சென்னை.


எங்கெல்லாம் இந்த வன்கொடுமை அரங்கேற்றபடுகிறதோ அங்கு மேல்சாதி என்று கூறிகொள்ளும் நபர்களால்தான் இது அரங்கேற்றபடுகிறது.தெரிந்தே விட்டுசெல்கின்றனர் தங்களின் சந்ததிக்கு இந்த சாதி பிரிவினையை.எத்தனை சட்டங்களும்,பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தோன்றி ஒரே சமுக கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு சாதி என்ற சொல்லை பயன்படுத்தி தான் உயர்ந்தவன் என்று சக மனிதனை இழிவுபடுத்துகின்ற வன்செயல் கூடாது என்றாலும் இவர்கள் மனம் மாற்றம் என்பது சற்று கடினம் என்றே கருததோன்றுகிறது.ஒவ்வொறு மதங்களும் தன் மக்கள் சிறப்பான சுயமரியாதை வாழ்வை வாழ அனுமதிக்கின்றன மற்றும் போதிக்கின்றன,ஆனால் இங்கு நாத்திகவாதிகளும்,பகுத்தறிவுவாதிகளும் மட்டுமே ஒங்கி குரல்கொடுக்கின்றனர்,இந்த நிலை மாறி சமயம் சார்ந்த கடும் எதிர்ப்பு குரலாக மாறும்பட்சத்தில் எங்கும் சமமான மாற்றம் ஏற்படும் என்றே கருதுகின்றேன்.


நாம் வேறுபட்டு நின்று இழப்பதற்கு பல காரணங்கள் உண்டாகலாம்,ஆனால் ஒன்றுபட்டு நிலைத்துநிற்க ஒரு காரணம் மாத்திரமே இருக்கும்.