வெள்ளி, ஆகஸ்ட் 19

ஐ.நா அறிக்கையும் தமிழர் கடைமையும்.. த.தே.பொ.கயின் பொதுகூட்டம் பட்டுகோட்டை.

பட்டுகோட்டை காவல்துறையின் மிரட்டலோடு 13-08-2011 மாலை சரியாக 6 மணிக்கு தமிழ் ஈழ ஆதரவு பாடல்களோடு கூட்டம் தொடங்கியது.கூட்ட ஒருகிணைப்பு என்னவோ தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியாக இருப்பினும் கலந்துகொண்டது பெரும்பாண்மையாக தமிழ் ஈழ ஆதரவாளர்களே,காரணம் உணர்ச்சிபாவலர் திரு.காசி ஆனந்தனின் பங்கேற்ப்பு.


அடக்கி ஒருக்கபட்டு,இனஅழிப்பிற்க்கு ஆளாகிய சொல்லனா துயரங்களோடு, முள்வேலி முகாமுகளிலும், தனது சொந்த இருப்பிடங்களை சிங்கள இராணுவனுக்கு கொடுத்துவிட்டு அதன் அருகிலேயே நாடோடிகளை போல குடிசையில் வாழும் நமது தொப்புல்கொடி உறவுகளுக்கு நாம் ஏதேனும் உதவி செய்திட மாட்டோமா..?   என்ற ஏக்கமே கூடி இருந்த இளைஞர்களின் மனதில் காணமுடிந்தது. ஈழ போரில் கடைசி நாட்களில் நடைபெற்ற மனிதபேரழிவு தாய்தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் ஒடுக்கபட்டது.ஈழ போரின் இறுதி கட்டதில் போராளிகள் மட்டுமல்ல அப்பாவி பொது மக்களும்,குழந்தைகளும் கொல்லபடுகிறார்கள் மற்றும் இளம் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளோடு கொல்லபடுகிறார்கள் என ஈழ ஆதரவாளர்கள் கதறினார்கள்..கேட்டார்களா அன்றைய ஆட்சியாளர்கள்,விளைவு.. நம் கண்முன்னால் கானொலியாக வலைதளங்களிலும்,குறுங்தகடுகளிலும் காணுகிறோம், 60 ஆண்டுகால இனபடுகொலையின் உச்சகட்டமாக போரில் பொதுமக்களும்,குழந்தைகளும்,இளம்பெண்களும் மற்றும் போரளிகளும் மிக கொடுரமாக கொல்லபட்டனர்,அதன் அடிப்படையில் ராஜபக்கியை போர்குற்றவாளி என அறிவிக்க வேண்டுமென இடதுசாரிகளும் மற்றும் தமிழ்பற்றாளர்களும் குரல்கொடுக்கின்றனர்.




திரு.காசி ஆனந்தன் அவர்கள்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகளொடு போர் செய்கிறோம் என்றாய்,ஆனால் இன்று யாரோடு போர் செய்ய
எம் மண்ணில் இத்தனை சிங்கள காடையர்களை குவித்து வைத்துள்ளாய்..? என்று கேள்வி எழுப்புகிறார்.




ஈழ இன பிரச்சனையில் தீர்கமான அரசியல் முடிவெடுக்க முடியாமல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுரை அரங்கேறும் அரசியல் அதிகாரவர்கத்தின் விருபத்திற்க்குகேற்ப கையாளப்பட்ட இன பிரச்சனை இன்று தாய் தமிழர்களை வஞ்சித்து உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை கொண்டுவந்துவிட்டது
எனது இந்திய தேசம்..



இந்திய தேசமே ஒருமுறையாவுது உண்மை பேசு...
என் ஈழதமிழனை காக்க அல்ல..
உன் இறையாண்மையை காக்க..




சனி, ஜூலை 9

விவசாய சங்க வைரவிழா மன்னார்குடி.

விவசாய சங்க தொடங்கபட்டதன் வைரவிழா இந்தியா முழுவதும் கொண்டாடபடுகின்றது,அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் மாநில விவசாய சங்க வைரவிழா 5 ஜூலை 20011-ல் மிக சிறப்பாக கொண்டாடபட்டது. தென்பறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீபந்தம் மேடையில் கொடுக்கபட்டு கொடியேற்றதுடன் விழா தொடங்கியது.பொதுவுடைமை இயக்கம் தொடங்கபடுவதற்க்கு முன் இந்தியாவில் ஏப்ரல் 11 - 1936 - ல் விவசாய சங்கம் கட்டமைக்கபடுகின்றது. இந்திய சுதந்திர போரட்டத்தோடு இணைந்து சமூக விடுதலைக்காவும் போரட தொடங்குகிறது விவசாய சங்கம்.

தொடக்ககாலம் விவசாய சங்கம் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டாலும் அதன் பணி நிலபிரபுக்களையும்,ஜமீந்தார்களையும்,ஜாதி முறைகளையும் எதிர்கொண்டு போரடிய பெருமை உண்டு.குறிப்பாக அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை பகுதில் இதன் பணி அளப்பரியது ,இன்றும் முழுமையாக விவசாயிகளின் நலன் சார்ந்த இயக்கமாக அதன் பணி தொடர்கின்றது.வைரவிழா கூட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன, அதில் சிறபான குறிப்பிட்ட சில தீர்மானங்கள் கீழ்வருவன.





1) காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தக் கோருதல்.

     தமிழகத்தின் வேளாண் உற்பத்திக்கும்,குடிநீர் ஆதாரத்திற்க்கும் பெரும் அளவில் பயன்பட்டு வரும் காவிரி நீர் பிரச்சனை 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவருகின்றது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும்,கர்நாடகம் அதை நிறைவேற்றவில்லை.மத்திய அரசு பாரமுகமாக இருந்து வருகின்றது.எனவே மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தீர்ப்பை அமல்படுதிடவும் தீர்ப்பின்படி கர்நாடகத்திடம் தண்ணீர் பெறவும் நடவடிக்கை எடுப்பதோடு காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு கமிட்டி அமைத்திடல் வேண்டும். மேலும் முல்லைபெரியார்,பாலாறு பிரச்சனைகளில் தமிழகத்தின் நியாயத்தை எடுத்துரைத்து உரிமைகளை பெருவதற்கு தமிழக அரசு அவசர உணர்வுடன் மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்.



2) மின்சாரப்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்
 
     அனைத்து பயன்பாட்டிற்க்கும் மின்சாரம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.இன் நிலையில் மின் தடை என்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆற்றும் பாசனம்,ஏரி பாசனம் குறைந்து வரும் நிலையில் நிலத்தடி நீர் பாசனம் அதிகரித்துவருகிறது.மின் மோட்டார்களை இயக்கிட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை.குறைந்த மின் அழுத்தத்தால் மோட்டார்களை பயன்படுத்துவதும்,அடிக்கடி மின் தடை ஏற்படுவதுடன்,நீண்ட நேர மின் சார தடைபடுவதால் வேளாண் உற்பத்தி பாதித்து விவசாயிகள் அவதியுறுகின்றனர். சிறிய,நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் இதர பயன்பாட்டிற்க்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன.விவசாயத்திர்க்கு முன்னுரிமை அடிப்படையில் தட்டுபாடின்றி 20 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும்.அத்துடன் அனைத்து உபயோகங்கக்கும் தடையின்றி மின் சாரம் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த மின் மாற்றிகளை சீரமைக்காமல் மாதகணக்கில் விட்டுவைக்க
படுகின்றன.மின் துறையில் இத்தகைய நிர்வாக மெத்தனத்தை போகிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




3) எண்டோ சல்பான் பூச்சிகொல்லியை தடைசெய்க:

     எண்டோ சல்பான் பூச்சிமருந்து புற்றுநோய் உள்பட,தடுக்க இயலாத பல்வேறு உடல் பாதிப்புகளை விளைவிக்கும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இந்த கொடிய நஞ்சுள்ள மருந்தை உலகில் பல நாடுகள் தடை செய்துள்ளன.இந்தியாவில் கேரளா,கர்நாடக மாநிலங்கள் தடை செய்துள்ளன.உச்ச நீதி மன்றமும் தடை விதிக்க வேண்டுமென அறிவுறித்தியுள்ளன.ஆகவே மத்திய அரசு உடன் இதை முற்றாக தடைசெய்து அறிவித்திட வேண்டும்.




4) 60 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்ககோரி

      நாட்டின் உணவு தேவைக்காக உழைத்து சோர்ந்து போன நிலையில் வாழ்ந்துவரும் 60 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் முதியோர் ஒய்வு ஊதியமாக ரூ.2000 மாதம்தோறும் வழங்கிட வேண்டும்.



இது போல் 23 சிறப்பான தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன.சிறப்பு பேச்சாளர்களாக ஆந்திரத்தை சேர்ந்த திரு.நாகேஸ்வர ராவ், இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் மற்றும் திரு.நல்லகண்ணு ஆகியோர் உரையாற்றினர். 


திரு.ந‌ல்ல‌க‌ண்ணு அவ‌ர்க‌ளின் உரை ஆடியோ கிளிக் செய்ய‌வும்.


வேளாண் விஞ்ஞானி ந‌ம்வாழ்வார் அவ‌ர்க‌ளின் உரை ஆடியோ கிளிக் செய்ய‌வும்.

வெள்ளி, மே 6

மே தின மற்றும் தியாகிகள் நினைவுநாள் பேரணி.

மே 1 உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைபாளிகளின் தினம் ஆம்பலாபட்டில் மே தின மற்றும் தியாகிகள் வாட்டாகுடி இரணியன்,ஆம்பல் ஆறுமுகம், ஜாம்பவான் ஒடை சிவராமன் இவர்களின் நினைவு தினமாகவும் மே 5-தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரணி தியாகி ஆறுமுகம் நினைவு தூணிலிருந்து S.A.முருகையன் அவர்கள் கொடி ஏற்றி டாக்டர்.வே.துரைமாணிக்கம் அவர்கள் தொடங்கி வைக்க பேரணி ஆம்பலாபட்டு,முள்ளூர்பட்டிகாடு,நெய்மேலி திப்பியக்டி,பாப்பநாடு,கரம்பயம் வழியாக பட்டுகோட்டையில் நடைபெற்ற தியாகிகள் நினைவுதின பொதுகூட்டதிற்க்கு சென்றடைந்தது.




பொதுகூட்டத்தில் பேசிய தோழர்களில் ஆம்பல் வீ.கல்யாணசுந்தரம்,பட்டுகோட்டை பக்கிரிசாமி,கரம்பயம் அரங்க.சின்னப்பா ஆகிறோர் மூன்று தியாகிகளின் தியாகங்களை இன்றை இளைய தலைமுறை புரிந்துகொள்ள கூடிய வகையில் சிறப்பாக எடுத்துறைதனர்.


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தா.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்
பேரணியை பார்வையிட்டு சிறப்புரை நிகழ்தினார்.தியாகிகளின் சிறப்புகளையும்,தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் அவருகே உரித்தான ஆக்ரோஷதுடன் தொடங்கி, தி.மு.க தலைவர் கலைஞர்.கருனாநிதியின் 2G நிலைபாடு மற்றும் ஈழத்தில் தமிழின படுகொலையில் அவரின் போலிநாடம் போன்ற விசயங்களை மிக சிறப்பாகவும், விரிவாகவும் பேசினார். செங்கமலத்தாங்காடு பி.ஆர்.நாதன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே பொது கூட்டம் சிறப்புடன் நிறைவு பெற்றது.

திங்கள், ஏப்ரல் 11

ஜனசக்தி : யார் பிற்போக்கு? சோனியாவிற்க்கு பதிலடி!

கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்போக்கான கட்சி எனவும் எந்தத் துறையிலும் நவினமோ,முற்போக்கு சிந்தனையோ இல்லாத கட்சி என்றும் மிகக் கடுமையாக
சாடியிருக்கிறார் சோனியா.கேரளாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

சோனியா இத்தாலியில் குழந்தையாய் இருந்தகாலம்,பாசிசத்தின் இருள் அகற்ற கம்யூனிஸ்டுகள் பட்டபாட்டையும் டோக்ளியாட்டி போன்ற கம்யூனிஸ்ட் மேதைகள் ஆற்றிய பணிகளையும் அவர் அறிந்திருப்பாரா? இல்லையென்றால் படித்தறிவது நல்லது.

இதே சோனியாவை இத்தாலி நாட்டை சார்ந்தவர் வேறொரு நாட்டுகாரர் என வலதுசாரிகள் கூறியபோது,"அவர் இந்தியர்,இந்திய குடியுறிமை பெற்றவர்,
நாட்டை சொல்லி மனிதரை வேறுபடுத்திட கூடாது' என முழக்கமிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அது முற்போக்கா? பிற்போக்கா?

ஒரு சீக்கியர் செய்த தவறுக்காக பல ஆயிரம் சீக்கியரை கொன்ற காங்கிரஸ் செயல் முற்போக்கா? மாறாக,சீக்கியர்களை பாதுகாக்க பிரதமர் ராஜிவ் காந்தி
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும்,அத்தோடு அனைத்து மக்களும்,சீக்கிய மக்களோடு ஒருமைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும்
தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து பிற்போக்கா?

இலங்கை தமிழ் மக்களின் உரிமை போரை அடக்கி ஒடுக்க இந்திய அரசு செய்த உதவிகளை ஆதரித காங்கிரஸின் செயல் முற்போக்கா? இலங்கை தமிழ் மக்களின் உரிமையை பறிக்க கூடாதுதென முழக்கமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்கா?


நவீனம் பற்றி பேசுகிறார் சோனியா.இந்தியாவில் 5 ஆண்டு திட்டங்களே முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிலாய், பொக்காரோ, பக்ராநங்கள், கூடாங்குளம் என நாடு நவீனம் கான குறல் கொடுத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.

ராகேஷ் சர்மா,மல்ஹோத்ரா விண்வெளி ஆய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட தீர்மானம் இயற்றியது இந்திய கம்யூனிஸ் கட்சி.

ஆபதில்லாத மின் திட்டங்களை கோரி இன்றும் போரடும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

அதுபோல் மக்களின் பசி போக்கும் உணவு திட்டம்,100 நாள் வேலை திட்டம்,தகவல் அறியும் உரிமை சட்டம்,ஆரம்ப கல்வி திட்டம், கிராமபுற சுகாதர திட்டம், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு திட்டமென கம்யூனிஸ்டுகள் முழங்கிய முழக்கம் எல்லாம் ஆழ்ந்த பொருள் கொண்ட நவீனத்தின் அடையாளம் அன்றோ.
இதை அறியாமல் சோனியா முழங்குவது ஆணவமன்றோ!



நன்றி: மு.வீரபாண்டியன்

படம்: google image

வெள்ளி, ஏப்ரல் 8

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்களை தண்டிப்பது யார்..?

தனி பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு வித பிரச்சனைகள்..

ஆனால் ஒரு சமுகத்தை பாதிக்ககூடிய பிரச்சனை, விவசாயி சந்திக்ககூடிய விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகள்.

தேர்தல் காலத்தில் கரைந்துபோகும் சில கதறல்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை. அதை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் யாரும் அதை பொருட்டாக மதிப்பதும்மில்லை.

தஞ்சை மாவட்டத்தில் காவேரி பொய்தபோன பின் நவீன கால ஆழ்துளை கிணறுகள் தோன்றின,அதற்க்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி உணவு உற்பத்தியை பெருக்கிட முனைந்தன. நாளடைவில்லை மின்சார பற்றாகுறையினால் மின்வெட்டு என்று ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்று கூறினார்கள்,மேட்டூர் நீர்வரத்து காலத்தில் பெருவாரியான விவசாயிகள் விவசாய தொழிலை செய்தாலும் பலன் மிக குறைவு,ஏனைனில் கடுமையான பருவநிலை மாற்றத்தினால் கலத்திற்க்கு வரவேண்டிய நெற்கதிர்கள் ஏனே மழை நீரில் அடித்து செல்லபடுவதும்,வயல்களில் கதிர்கள் அழிகிபோவதும் தஞ்சை மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாடிக்கையான ஒன்று

சம்பா விவாசயம் செய்யும் போது எந்தவிதமான இயற்கை சீற்றங்களுமின்றி ஆழ்துளை கிணறு உதவியின் மூலம் நெற்கதிர்கள் முழுவதும் வீடு வருவதும்
அதன் பலன் முழுமையாக விவசாயியை சாறுகின்றது. வருடம் முழுவதும் வயல்வெளிகலில் படும் கஷ்டம் இந்த சம்பா அறுவடையின் மூலம் கொஞ்சம் நிவர்த்திசெய்யபடுகின்றது. இந்த பயனை விவசாயிகள் உபயோகிக்க முடியாமல் மின்சாரத்தினை ஒழுங்காக 6 மணி விடுவதில்லை.பகுதி நடுஇரவிலும்,பகுதி
மாலையிலும் மொத்தமாக 4 மணி நேரத்திர்க்கு குறைவாக விடுகின்றனர்.

சரி விசயத்திர்க்கு வருவோம்,

ஒரத்தநாடு வட்டாரத்திர்க்கு உட்பட்ட மின்சார துறை ஊழியர்களின் அலட்சியம், பொருப்பின்மை மற்றும் ஆழ்துளை கிணறு விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பெருவது என முறையற்ற செயல்களில் ஈடுபடுவதினால் ஆழ்துளை கிணறு இருந்தும் செய்த சம்பா விவசாயத்தினை காப்பற்ற முடிவதில்லை.

மின்மாற்றி பழுதடைந்தால் ஊழியர்களின் அலட்சியத்தினால் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துவது, பின்பு அதை தஞ்சாவுரிலிருந்து கொண்டுவந்து பொருத்துவது வரை செலவாகும் தொகையினை அழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யபடுகின்றது. இது மின்சார துறையின் விதிகளின் கீழ் வருகின்றதா என எவருக்கும் தெரிவதில்லை. மின்மாற்றியில் ஏதேனும் சிறிது பழுதெனில் செய்துவிட்டு விவசாயிகளிடம் கையேந்தும் கீழ்தரமான பழக்கம்.

சமீபத்தில் எங்கள் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம். சாலையோர திருப்பத்திலிருந்த மின்சார போஸ்ட் ஒன்று லாரி ஒட்டுனரால் சேதமாகிவிடுகின்றது.மின்சார துறை ஊழியர்களால் அந்த ஒட்டுனரிடமிருந்து நஷ்டயீடாக ரூபாய் 5000 வசூல் செய்யபடுகின்றது,பின்பு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடமிருந்து தலா ரூபாய் 300 - ம் வசூல் செய்யபடுகின்றது. இது போன்ற முறையற்ற நடவடிக்கையை மேல்அதிகாரிகள் கண்டிப்பதில்லை.

அரசியல்வாதிகள் தம் கடமையிலிருந்தும்,பொருப்பிலிருந்தும் தவறும் போது அடுத்து வரும் தேர்தலில் மூலம் அவர்களை தண்டிக்க கூடிய வாய்பினை மக்களாட்சி சாதரண குடிமக்களுக்கு தருகின்றது. ஆனால் அரசு துறையில் பொருப்பான பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்யும் அதிகாரிகளையும்,ஊழியர்களையும் தண்டிப்பது யார்..? ஒரத்தநாடு மின்சார துறையின் ஒழிங்கினங்களை களைவது யார்..?




படங்கள்: ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில் சமீபத்தில் ஒரத்தநாடு மின்சாரதுறையின் அலட்சியத்தால் கருகிய பயிர்கள்.


புதன், மார்ச் 30

35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகள்: தமிழக அரசின் சாதனை பட்டியல்.

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. வீடு, டி கடையென ஒவ்வொரு இடங்ககளிலும் அதன் பாதிப்பு தெரிகின்றன. செய்திதாள்களும் அதன் பங்கிர்க்கு
அரசின் திட்டங்களை ஆதரிப்பது,விமர்சிப்பது என பல கட்டுரைகள்,செய்திகள் வெளியிடுகின்றன.

தமிழக அரசின் மதுனான கொள்முதல் மற்றும் அதன் பயனாளிகள்,மதுபான விற்பனையின் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடு என்ன..? புள்ளி விபரங்களோடு சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து சிறு தொகுப்பை ஜனசக்தி நாளிதழில் வெளியிட்டனர். சிறப்பான கட்டுரை என்பதினால், இதை எனது வலைபூவின் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஜனசக்தியில் வெளிவந்த அந்த கட்டுரையை
அப்படியே இங்கே பதிவு செய்து உள்ளேன்.



இந்தியாலேயே அதிக மதுபான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியுள்ளது தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சிக்கு முன்பு 10 மது ஆலைகள் பத்தாது என்று இப்போது 19 ஆக உயர்ந்துள்ளது. உற்ப்பத்தியாளர்களின் பெரும்பாலானவர்கள் தி.மு.கவினர் மற்றும் கருணாநிதி குடும்ப விசுவாசிகளே !

மதுபானத்தின் விலையில் பத்து சதவிதமே அதன் உற்பத்தி செலவாகும்.ஆக 90 சதவிகித லாபத்தில் விற்க்கபடும் மதுவில் அரசும் அதை உற்பத்தி செய்யும்
முதலாலிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர்.அதாவது பதினெட்டு ரூபாய்வுக்கு உற்பத்தி செய்யபடும் பிராந்தி ரூபாய் 380 - க்கு விற்க்கபடும்.

அ.தி.மு.க ஆட்சி முடிவடையும் தருவாயில் டாஸ்மாக்கின் விற்பனை 9800 கோடியாக இருந்தது.இப்போது விற்பனையின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு இரண்டு முறை விலை ஏற்றமும் செய்தார்கள்.அந்த வகையில் தற்போது விற்பனை குறைந்தது 30,000 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ இதில் பாதியைதான் கணக்கில் காட்டுகிறது.

ஏன்? என்ன நடக்கிறது? என்று விசாரித்தால் டாஸ்மாக் விற்பனையில் பாதி கணக்கில் வருகிறது.மீதி கணக்கில் காட்டாமல் கபளீகரம்மாகிறது.இந்த திருட்டு
லாபம் ஆட்சியாளர்களாலும் மது உற்பத்திளார்களாலும் பகிர்ந்து கொள்ளபடுகிறது. ஆக,மது விற்பனை லாபம் அரசு கஜானவிற்க்கு மட்டும்மல்ல, குடும்ப கஜானாவிற்க்கும்தான்!

அ.தி.மு.க ஆட்சியிலும் மது விற்பனையானது.ஆனால் லாபம் முழுமையாக அரசுக்கு வந்தது.அதேபோல் பார் நடத்துபவர்களிடமிருந்து வரியும் சரியாக
வசூல் செய்யபட்டது.இப்போது வரியே வசூலாவதில்லை - மாமூல்தான் வசூலாகிறது.மதுபான விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் எந்த உருபடியான
சமுதாய வளர்ச்சி திட்டமோ,நிரந்தர பலன் தரும் மக்கள் மேம்பாட்டு திட்டமோ செயல்படுத்தபடவில்லை.மக்களை பிச்சைகாரர்களாக்கி இலவசங்களுக்காக
கையேந்த வைப்பதே மதுபான விற்பனையின் சூழ்ச்சியாகும்.


மதிவில் கிடைக்கும் வருமான பெரும்பாலும் - ஏழை,எளிய நடுத்தர குடும்பங்களின் உணவு,உடை,கல்வி போன்றவற்றிற்கு பயன்படுத்தபடாமல் அக் குடும்ப தலைவர்களால் டாஸ்மாக்கில் கொடுக்கபடும் பணம் ஆகும்.மது பெருக்கத்தால் தமிழகத்தில் உள்ள லட்சகணக்காண குடும்பங்களில் நிம்மதி பறிபோய்,சண்டை,சச்சரவுகள் வலு பெற்றுள்ளன.
விதவை,பென்ஸன் பெரும் பெண்களில் பெரும்பாலானோர் குடித்துக்குடித்தே செத்துபோன கணவனின் மனைவிமார்கள்...!

இன்றைய தினம் இளைஞர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள், பெண்கள்... புதிதாகவும்,வேகவேகமாகவும் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி வருவதை தடிக்க தவறினால் நாளைய தமிழகம் மீள முடியாத அளவிற்க்கு சீரழிந்து விடும்.

மது விற்பனை அதிகரித்ததால் சாலை விபத்துகளும் அதிகரித்துவிட்டன. தமிழகத்தில் தினசரி சுமார் 40 பேர் சாலை விபத்துகளில் சாவதாக போக்குவரத்து
காவல்துறை தெரிவித்துள்ளது.

காந்திய அமைப்பான சர்வோதய மண்டல் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் நெல்லையில் ரெங்கபுரம் என்ற சிறு கிராமத்தில் உள்ள 400 தலித்து வீடுகளில்
398 வீடுகளில் உள்ளோர்க்கு 15 வயது சிறுவன் உட்பட மதுபழக்கம் இருக்கிறது. அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒருநாள் வருமானம் ஒன்றேகால்
லட்சமாக உள்ளது.

தர்மபுரி மாவட்டம் செக்கொடி கிராமதில் உள்ள 325 வீடுகளில் நடத்தபட்ட ஆய்வில் 35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகளை கணகெடுத்துள்ளனர்.
கணவன்மார்கள் அனைவரும் மதுவிற்க்கு பலியாகியுள்ளனர். ஒரு குடும்பத்திற்க்கு ஒரு நாளுக்கு இருவர் சம்பாதிக்கும் 400 ரூபாயில் 350 ரூபாய் மதுக்கடைக்கு சென்று விடுகிறது.


ஆம் ! தமிழக கிராமங்கள் மதுவில் மூழ்கி சீரழிகின்றன.



நன்றி : ஜனசக்தி நாளிதழ்.



வியாழன், பிப்ரவரி 10

வ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.

ஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!! உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்... உன்னைய யாரு இங்க வரசொன்னது... நீ என்ன வேலை பார்கிரே... ரெம்ப பேசுர.... சரி..சரி எவ்வளவு வச்சிருக்கே...கொடுத்துட்டு போ... மேற்கண்ட அனைத்து வசனங்களும் ஏதோ மீன் கடையிலோ அல்லது காய்கறி கடையிலோ நடைபெருவது அல்ல..திருச்சி விமான நிலைய பயணிகள் வெளியேறும் வாயிலில் நின்று கொண்டு வ‌சூல் வேட்டையில் (சத்தியமா பிச்சை இல்லிங்க!!) ஈடுபடும் சுங்க அதிகாரிகளிடம் சர்வ சாதரணமாக வெளிபடும் வார்த்தைகள். கடந்த இரண்டரை வருடங்களில் மூன்று முறை இதே திருச்சி விமான நிலையத்தின் வாயிலாகத்தான் சென்று வந்து உள்ளேன், ஆனால் இம்முறை பட்ட அனுபவமும், கண்ட காட்சிகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமல்லாது மேலும் தாங்களும் இவ் வாயிலை பயன்படுத்த கூடும்,ஆகவே நீங்கள் எச்சரிகையோடு எவ்வாரு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவே.. கொழும்பு விமான நிலையத்திலிருந்து தொடங்கிவிட்டுருந்தன நினைவுகள்...இப்போது அனைவரும் நமக்காக காத்திருப்பார்கள்..செல்ல மனைவி,அண்ணன்,அண்னி, அத்தான்,அக்கா,எங்கள் வீட்டின் செல்ல வால், இவர்களை இன்னும் சில நிமிடங்களில் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சியோடு இறங்கிய வேகத்தில் முதல் ஆளாக நின்று பாஸ்போர்ட்ல் முத்திரைய பதித்துகொண்டு,அடுத்த கட்டத்திற்க்கு நகர அனைத்தையும் உள்ளே தினித்து விட்டு மறுமுனையை சென்று நின்ற போது,கவனமாக பரிசோதனை இயந்திரத்தை பார்த்து கொண்டிருந்தவர் என்னை பார்த்து அருகில் அழைத்து 'என்னங்க ரெண்டு வச்சிருக்கிங்க என்றார்!!' நான் 'சார்......'' என்றவாறே இழுத்த போது அருகில் இருந்த ஒருவர் 'எங்கிருந்து வர்ரீங்க..என்றார்'' நான் 'கல்ஃப்' என்றேன்..அவர் மற்றவரிடத்தில் 'சார் கல்ஃப்லேருந்து வர்ரவங்களுக்கு மூனுவரை...'' என்றார். தப்பித்தோம் இதை கண்ணில் காட்டினால்தான் நண்பனிடத்தில் மறக்கவில்லை என்று சர்டிபிகேட்டு கிடைக்கும் என்று நினைத்துகொண்டு நகர்ந்தேன்.அடுத்த கட்டத்தின் அபாயம் அறியாது. முதலில் வந்திருந்தாலும் பகுதி நேரம் கொண்டு வந்த பொருளை மீட்டு கொண்டு போகவே சரியாக இருந்தது..எனக்கு பின்னால் அனைவரும் ஆவலோடு முண்டிகொண்டிருக்க நான் எனது உரிமையை விட்டு கொடுக்காமல் முன் நின்று அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியேற முனைந்தபோது.. நான் தள்ளிகொண்டு வந்த ட்ராளியை மறித்து ''நீங்க அங்க போங்க...''' என்றார்.எனக்கு புரிந்து விட்டது எனது ட்ராலில் இருந்த ப்லாஸ்மா டி.வி தான் இதற்க்கு காரணமென்று. மூன்று கௌண்டர் இருந்தாலும் குறிப்பாக நடுவில் இருந்த கௌண்டரை நோக்கி போகுமாறு சைகை செய்யபட்டேன். நான் 'வணக்கம் சார்'' என்றேன். அவர் ' நீங்க கொண்டு வந்திருக்கிற L.C.D டி.விக்கு கஸ்டம்ஸ் கட்டனும் எப்படி...'' என்றவாரே இழுத்தார். நான் ''சார் இது குறைவான விலைக்கே வாங்கினது... என்றவாறே டி.வி வாங்கின விலைபட்டியலை அவரிடத்தில் காண்பித்தேன். அதிகாரி சற்று கோபமாக கணக்கீடு செய்து கொண்டு இருந்தார், அப்போது எனக்கு அருகில் வந்த மற்றொரு வெள்ளை உடையனிந்த அதிகாரி '' என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா...!! என்றவாறே இழுத்தார். நான் அவரிடத்தில் திரும்பி ''சார் நான் கொண்டு வந்திருக்கின்ற டி.வி ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் கூட மதிப்பு கிடையாது சார் பின்ன ஏன் சார்..''என்றேன். எனக்கு லஞ்சமாக அவரிடத்தில் பணம் கொடுக்க விருப்பமில்லை,லஞ்சம் கொடுக்காமல் வாழ பழகிகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான் ஆகவே அவரிடத்திலும் விலைபட்டியலை காண்பித்தேன். அவர் 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!! உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்... இதையல்லாம் கவனித்துகொண்டிருந்த அந்த அதிகாரி சற்று கோபமாக அவரிடத்தில் ''விடுங்க சார் இவனுகளுகெல்லாம்... என்றார்.நிலைமை தீவரமாவதை உணர்ந்த நான் '' சார் உங்க அதிகாரியிடம் பேசனும் என்றேன்..'' அவர் என்னை பார்த்து ''ஏன்யா காலையிலேயே உயிர வாங்கிர..அப்படி ஒரமா நில்லு'' என்றார்,அங்கே சொல்லியும் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற அர்தத்தோடு. ஒரமாக நின்றுகொண்டு என்னை சுற்றி என்ன நடக்கின்றது கவனிக்க தொடங்கினேன். என்னோடு முன்பு ''என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா... என்றாறே அந்த அதிகாரி ஒருவரை கௌண்டர் முன் கொண்டு வந்து அவரிடத்தில் ''எவ்வளவு வைச்சிருக்கே..'' என்றார். அவர் ''சார் எங்கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு சார்...!!என்றார் பரிதாபமாக. தொடர்ந்து ''திருச்சியெலதான் சார் இப்படி பன்றிங்க...'' சொல்லி முடிப்பதற்க்குள் அந்த மெல்லிய முருக்கு மீசை அதிகாரி கோபமாக அவரிடத்தில் ''உன்னைய யாருயா இங்க வரச்சொன்னது..'' இங்லாந்து ராணி இவர் தாத்தாகிட்டதான் இந்தியாவை எழுதி கொடுத்துட்டு போனது போல இருந்தது அதிகாரம். அந்த பயணிக்கு இதற்கு மேல் பேச இருப்பமில்லை என்று தெரிந்தது ''சார் ஆயிரம் வச்சிகிட்டு விடுங்க வெளில ஆளுங்க காத்துகிட்டுருப்பாங்க.. என்றார் பரிதாபமாக, இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் கைமாரி. இவரை போலவே வெள்ளை சீருடை அனிந்த மற்றஅதிகாரிகளும் வேக,வேகமாக பயணிகளை ஒரம்கட்டி சுங்க துறையின் பெருமையினை காப்பாறினர்(?) ''ஹெலோ..ஹெலோ...'' என்ற சத்தத்தை கேட்டு திரும்பி எனது கௌண்டரை கவனித்தேன், கௌண்டருக்குள் இருந்த அந்த அதிகாரி மற்ற ஒருவரிடம் எனது டி.வியை காண்பித்து ஏதோ கூறிகொண்டு என்னை அழைத்தார், சீருடையேதும் அனிந்திருக்கவில்லை அவர். அவரிடத்தில் ''சார் இந்த டி.வியை நான் வாங்கினது இருபத்திரெண்டாயிரத்துக்கு குறைவான விலை தான் பின்பு ஏன் சார் நான் சுங்கவரி கட்ட வேண்டும்'' என்றேன் பணிவாக. அவர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வெள்ளை காகிதத்தில் நான் கொண்டுவந்த டி.வியின் கம்பெனி பெயர்,அதன் அளவு(LCD) ஆகியவற்றை காண்பித்து இதற்க்கு தாங்கள் மூன்றாயிறத்து அறநூறு கட்ட வேண்டும் என்றார். நான் எனது டி.வியின் விலை மற்றும் அதனுடைய மாடல் தாங்களுடைய வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளதிலிருந்து மாறுபட்டது என நான் டி.வி வாங்கின விலைபட்டியல் மற்றும் டி.வியின் மேல் எழுதப்பட்ட மாடல் (ப்லாஸ்மா) ஆகியவற்றை காண்பித்தேன். அவர் கட்டபஞ்சாயத்து கணக்காக ''சரி நீங்க ஆயிரத்து அறநூறு கட்டிட்டு போங்க..!! என்று கூறிவிட்டு சென்று விட்டார். நானும் சரி நாம கொடுக்கிற காசும் அரசாங்கத்துக்குதானே போகுது என்று அதற்கு மேல் ஏதும் பேசாமல் என்னுடைய பையிலிருந்து பணம் எடுத்து கௌண்டரில் இருந்த சுங்க அதிகாரியிடம் கொடுக்க முயன்றேன். அதுவரை அங்கு நடப்பதை கவனித்த அந்த அதிகாரி, கைக்கு கிடைக்கவேண்டிய பணமும் போகின்றது அதுமட்டுமல்லாது மேல் அதிகாரியிடம் செல்கின்றான் என்று கோபமாக ''இல்ல நீ இரண்டாயிரத்து ஐநூறு கட்டடிட்டு போ..'' என்றார் நான் ''ஏன் சார் என்றேன்'' என்றேன். ''நீ இரண்டு பாட்டில் கொண்டு வந்திருக்க பின்ன எல்லாத்தையும் திறந்து பார்கனும்...என்று கூறிவிட்டு ஒரமாக நில்லுங்க என்றார் சாதரணமாக. எனக்கு புரிந்து விட்டது அப்பட்டமாக அதிகார துஷ்பிரோயோகம்,ஒரு பொருப்பான சுங்க அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வாறு நடந்துகொள்வதோ...லஞ்சம் கொடுக்கவில்லை என கொண்டுவந்திருக்கும் டி.விக்கு அளவுக்கு அதிகமான சுங்க வரி மற்றும் மனஉலச்சல் அளிக்க கூடிய செயல்பாடு.. இனி இங்கு பேசி எந்த பயனுமில்லை,நமக்காக அனைவரும் ஆவலோடு வெளியில் காத்திருக்கிறார்கள் இரண்டுமணி நேரத்திற்க்கு மேலாக,ஆகவே கொடுக்க கூடிய பணமும் அரசாங்கத்திற்க்கு தான் போகின்றது என மனதிருப்தியோடு அவர் கேட்ட பணத்தினை கொடுத்து சுங்கவரி செலுத்திய பேப்பரினை பெற்று கொண்டு வெளியேறினேன்,
சென்னை விமான நிலைய அனுபவம்,மற்றும் நண்பர்களின் மூலம் கோவை விமான நிலைய அனுபவம் இவைகளுடன் ஒப்பிடும் போது திருச்சி விமான நிலைய வெள்ளை உடையனிந்த சுங்க அதிகாரிகள் அவர்களின் பொருப்புகளிலிருந்து விலகி பயணிகளிடம் வாயிலில் நின்று வெளிபடையாக லஞ்சம் பெருவதை காணுபோது, எங்கள் ஊருக்கு அருகில் கரம்பயம் மாரியம்மன் கோயில் உள்ளது அதன் வாயிலில் காவி உடையனிந்த நபர்கள் இதுபோல்தான் நிற்பார்கள், எனக்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லையென்றே தோன்றுகின்றது. வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் தெரிவிப்பது யாதனில்; உறவுகளிடத்தில் பொழைக்க தெரியாதவன்,உலகம் புரியாதவன் என்று திட்டுவாங்குவதற்க்கு பதிலாக சுங்க அதிகாரியிடம் 500-ய் கண்ணில் காட்டும்போது,அவர் பேண்டு பாக்கெட்டு வசதியாக தெரியும்படி திரும்பிகொள்வார், அப்போது அதன் உள்ளே தினித்துவிட்டு கம்பீரமாக வெளியேருவதா இல்லை என்னை போல நொந்து..நூடுஸ்.. ஆகி வெளியேரும் போதுகூட மனதில் ஏதோ ஒரு மூலையில் ஆத்ம திருப்தியோடு வெளியேருவதா என நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே.

ஞாயிறு, ஜனவரி 16

தேவைதான இந்த பக்தி ?

கேரள ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின் போது 109 பக்கதர்கள் உயிர்யிழந்தனர் என்ற செய்தி, தமிழக மக்களிடையேதான் மிக அதிக சோகத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.ஏனெனில் அதிக அளவில் தமிழகத்தினை சார்ந்த ஜயப்ப பக்தர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். தமிழகத்தில் அதி விமர்சயாக கொண்டாடபடும் பண்டிகை தினத்தின் போது சோக நிகழ்வு ஏற்பட்டு இருப்பது இந்த வருட பண்டிகை சோகம் நிறைந்ததாகவே காணபடுகிறது.


இந்த சோக நிகழ்வின் ஊடே ஒரு கேள்வி எழுகிறது தேவைதான இந்த பக்தி..?

அனேக தமிழக கிராமங்களில் காண நேர்ந்துதிருக்க கூடும் ஏதோ ஒரு பாழடைந்த கோயில்.நமது முன்னோர்கள் நம்பிக்கையோடு வழிபட்ட தளங்கள் இன்று பாழடைந்து,பூசை மற்றும் இத்தியாதி...இத்தியாதி.. செய்க கூட ஆள்அரவமற்று வவ்வால்(?) குடிகொண்டுருக்கும். நமது முன்னோர்களின் நம்பிக்கை இன்று தகர்ந்து போனது ஏன்? இது ஏதோ பகுத்தறிவாதிகள் ஏற்படுத்திய சதியோ மற்றும் மக்களிடத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதுஎன்றோ அல்ல..உச்ச கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்களால்தான் இன்று இந்த நிலைமை.


ஒவ்வொரு வருடமும் கேரள ஜயபனுக்கும்,ஆந்திர ஏழுமைலையானுக்கும் படையெடுக்கும் தமிழக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கணக்கில் அடங்கா. இந்த இருவருக்கும் ஏன் இந்த முக்கியத்துவம்..? நமது முன்னோர்கள் நம்பிகையோடு வழிபட்ட தளங்கள் பாழடைந்து கிடக்கின்றன ஏன்..? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை..?


பக்தர்களின் நம்பிக்கையை மூலதனமாக்கும் அரசும் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள்,குறைந்தபட்சம் பாதுகாப்பு அளிக்ககூடவா முடியவில்லை..?

பகுத்தறிவையும் தாண்டி சில கேள்விகள் எழதான் செய்கின்றன.

அதீத கடவுள் நம்பிக்கை பத்தர்களே முதலில் நம்பிக்கையை நம்மிடமிருந்தே தொடங்குவோம், பின்பு எல்லைகளை கடந்து.

வெள்ளி, ஜனவரி 14

பொங்கல் வாழ்த்து




வான் பொய்தபோதும்
வயல் கொண்ட நீர்
வற்றிடா போதும்,
நித்தம் கலனி கண்டு
கிட்டிய கால் பங்கும்
உலக ஒட்டதின் ஒவ்வா
பயனாய் ஆன போதும்,
செய்திடுவோம் தீதுயின்றி
உலகம் உய்ய..


என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.