திங்கள், ஏப்ரல் 11

ஜனசக்தி : யார் பிற்போக்கு? சோனியாவிற்க்கு பதிலடி!

கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்போக்கான கட்சி எனவும் எந்தத் துறையிலும் நவினமோ,முற்போக்கு சிந்தனையோ இல்லாத கட்சி என்றும் மிகக் கடுமையாக
சாடியிருக்கிறார் சோனியா.கேரளாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

சோனியா இத்தாலியில் குழந்தையாய் இருந்தகாலம்,பாசிசத்தின் இருள் அகற்ற கம்யூனிஸ்டுகள் பட்டபாட்டையும் டோக்ளியாட்டி போன்ற கம்யூனிஸ்ட் மேதைகள் ஆற்றிய பணிகளையும் அவர் அறிந்திருப்பாரா? இல்லையென்றால் படித்தறிவது நல்லது.

இதே சோனியாவை இத்தாலி நாட்டை சார்ந்தவர் வேறொரு நாட்டுகாரர் என வலதுசாரிகள் கூறியபோது,"அவர் இந்தியர்,இந்திய குடியுறிமை பெற்றவர்,
நாட்டை சொல்லி மனிதரை வேறுபடுத்திட கூடாது' என முழக்கமிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அது முற்போக்கா? பிற்போக்கா?

ஒரு சீக்கியர் செய்த தவறுக்காக பல ஆயிரம் சீக்கியரை கொன்ற காங்கிரஸ் செயல் முற்போக்கா? மாறாக,சீக்கியர்களை பாதுகாக்க பிரதமர் ராஜிவ் காந்தி
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும்,அத்தோடு அனைத்து மக்களும்,சீக்கிய மக்களோடு ஒருமைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும்
தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து பிற்போக்கா?

இலங்கை தமிழ் மக்களின் உரிமை போரை அடக்கி ஒடுக்க இந்திய அரசு செய்த உதவிகளை ஆதரித காங்கிரஸின் செயல் முற்போக்கா? இலங்கை தமிழ் மக்களின் உரிமையை பறிக்க கூடாதுதென முழக்கமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்கா?


நவீனம் பற்றி பேசுகிறார் சோனியா.இந்தியாவில் 5 ஆண்டு திட்டங்களே முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிலாய், பொக்காரோ, பக்ராநங்கள், கூடாங்குளம் என நாடு நவீனம் கான குறல் கொடுத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.

ராகேஷ் சர்மா,மல்ஹோத்ரா விண்வெளி ஆய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட தீர்மானம் இயற்றியது இந்திய கம்யூனிஸ் கட்சி.

ஆபதில்லாத மின் திட்டங்களை கோரி இன்றும் போரடும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

அதுபோல் மக்களின் பசி போக்கும் உணவு திட்டம்,100 நாள் வேலை திட்டம்,தகவல் அறியும் உரிமை சட்டம்,ஆரம்ப கல்வி திட்டம், கிராமபுற சுகாதர திட்டம், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு திட்டமென கம்யூனிஸ்டுகள் முழங்கிய முழக்கம் எல்லாம் ஆழ்ந்த பொருள் கொண்ட நவீனத்தின் அடையாளம் அன்றோ.
இதை அறியாமல் சோனியா முழங்குவது ஆணவமன்றோ!நன்றி: மு.வீரபாண்டியன்

படம்: google image

வெள்ளி, ஏப்ரல் 8

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்களை தண்டிப்பது யார்..?

தனி பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு வித பிரச்சனைகள்..

ஆனால் ஒரு சமுகத்தை பாதிக்ககூடிய பிரச்சனை, விவசாயி சந்திக்ககூடிய விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகள்.

தேர்தல் காலத்தில் கரைந்துபோகும் சில கதறல்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை. அதை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் யாரும் அதை பொருட்டாக மதிப்பதும்மில்லை.

தஞ்சை மாவட்டத்தில் காவேரி பொய்தபோன பின் நவீன கால ஆழ்துளை கிணறுகள் தோன்றின,அதற்க்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி உணவு உற்பத்தியை பெருக்கிட முனைந்தன. நாளடைவில்லை மின்சார பற்றாகுறையினால் மின்வெட்டு என்று ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்று கூறினார்கள்,மேட்டூர் நீர்வரத்து காலத்தில் பெருவாரியான விவசாயிகள் விவசாய தொழிலை செய்தாலும் பலன் மிக குறைவு,ஏனைனில் கடுமையான பருவநிலை மாற்றத்தினால் கலத்திற்க்கு வரவேண்டிய நெற்கதிர்கள் ஏனே மழை நீரில் அடித்து செல்லபடுவதும்,வயல்களில் கதிர்கள் அழிகிபோவதும் தஞ்சை மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாடிக்கையான ஒன்று

சம்பா விவாசயம் செய்யும் போது எந்தவிதமான இயற்கை சீற்றங்களுமின்றி ஆழ்துளை கிணறு உதவியின் மூலம் நெற்கதிர்கள் முழுவதும் வீடு வருவதும்
அதன் பலன் முழுமையாக விவசாயியை சாறுகின்றது. வருடம் முழுவதும் வயல்வெளிகலில் படும் கஷ்டம் இந்த சம்பா அறுவடையின் மூலம் கொஞ்சம் நிவர்த்திசெய்யபடுகின்றது. இந்த பயனை விவசாயிகள் உபயோகிக்க முடியாமல் மின்சாரத்தினை ஒழுங்காக 6 மணி விடுவதில்லை.பகுதி நடுஇரவிலும்,பகுதி
மாலையிலும் மொத்தமாக 4 மணி நேரத்திர்க்கு குறைவாக விடுகின்றனர்.

சரி விசயத்திர்க்கு வருவோம்,

ஒரத்தநாடு வட்டாரத்திர்க்கு உட்பட்ட மின்சார துறை ஊழியர்களின் அலட்சியம், பொருப்பின்மை மற்றும் ஆழ்துளை கிணறு விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பெருவது என முறையற்ற செயல்களில் ஈடுபடுவதினால் ஆழ்துளை கிணறு இருந்தும் செய்த சம்பா விவசாயத்தினை காப்பற்ற முடிவதில்லை.

மின்மாற்றி பழுதடைந்தால் ஊழியர்களின் அலட்சியத்தினால் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துவது, பின்பு அதை தஞ்சாவுரிலிருந்து கொண்டுவந்து பொருத்துவது வரை செலவாகும் தொகையினை அழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யபடுகின்றது. இது மின்சார துறையின் விதிகளின் கீழ் வருகின்றதா என எவருக்கும் தெரிவதில்லை. மின்மாற்றியில் ஏதேனும் சிறிது பழுதெனில் செய்துவிட்டு விவசாயிகளிடம் கையேந்தும் கீழ்தரமான பழக்கம்.

சமீபத்தில் எங்கள் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம். சாலையோர திருப்பத்திலிருந்த மின்சார போஸ்ட் ஒன்று லாரி ஒட்டுனரால் சேதமாகிவிடுகின்றது.மின்சார துறை ஊழியர்களால் அந்த ஒட்டுனரிடமிருந்து நஷ்டயீடாக ரூபாய் 5000 வசூல் செய்யபடுகின்றது,பின்பு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடமிருந்து தலா ரூபாய் 300 - ம் வசூல் செய்யபடுகின்றது. இது போன்ற முறையற்ற நடவடிக்கையை மேல்அதிகாரிகள் கண்டிப்பதில்லை.

அரசியல்வாதிகள் தம் கடமையிலிருந்தும்,பொருப்பிலிருந்தும் தவறும் போது அடுத்து வரும் தேர்தலில் மூலம் அவர்களை தண்டிக்க கூடிய வாய்பினை மக்களாட்சி சாதரண குடிமக்களுக்கு தருகின்றது. ஆனால் அரசு துறையில் பொருப்பான பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்யும் அதிகாரிகளையும்,ஊழியர்களையும் தண்டிப்பது யார்..? ஒரத்தநாடு மின்சார துறையின் ஒழிங்கினங்களை களைவது யார்..?
படங்கள்: ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில் சமீபத்தில் ஒரத்தநாடு மின்சாரதுறையின் அலட்சியத்தால் கருகிய பயிர்கள்.