ஞாயிறு, ஜனவரி 16

தேவைதான இந்த பக்தி ?

கேரள ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின் போது 109 பக்கதர்கள் உயிர்யிழந்தனர் என்ற செய்தி, தமிழக மக்களிடையேதான் மிக அதிக சோகத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.ஏனெனில் அதிக அளவில் தமிழகத்தினை சார்ந்த ஜயப்ப பக்தர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். தமிழகத்தில் அதி விமர்சயாக கொண்டாடபடும் பண்டிகை தினத்தின் போது சோக நிகழ்வு ஏற்பட்டு இருப்பது இந்த வருட பண்டிகை சோகம் நிறைந்ததாகவே காணபடுகிறது.


இந்த சோக நிகழ்வின் ஊடே ஒரு கேள்வி எழுகிறது தேவைதான இந்த பக்தி..?

அனேக தமிழக கிராமங்களில் காண நேர்ந்துதிருக்க கூடும் ஏதோ ஒரு பாழடைந்த கோயில்.நமது முன்னோர்கள் நம்பிக்கையோடு வழிபட்ட தளங்கள் இன்று பாழடைந்து,பூசை மற்றும் இத்தியாதி...இத்தியாதி.. செய்க கூட ஆள்அரவமற்று வவ்வால்(?) குடிகொண்டுருக்கும். நமது முன்னோர்களின் நம்பிக்கை இன்று தகர்ந்து போனது ஏன்? இது ஏதோ பகுத்தறிவாதிகள் ஏற்படுத்திய சதியோ மற்றும் மக்களிடத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதுஎன்றோ அல்ல..உச்ச கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்களால்தான் இன்று இந்த நிலைமை.


ஒவ்வொரு வருடமும் கேரள ஜயபனுக்கும்,ஆந்திர ஏழுமைலையானுக்கும் படையெடுக்கும் தமிழக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கணக்கில் அடங்கா. இந்த இருவருக்கும் ஏன் இந்த முக்கியத்துவம்..? நமது முன்னோர்கள் நம்பிகையோடு வழிபட்ட தளங்கள் பாழடைந்து கிடக்கின்றன ஏன்..? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை..?


பக்தர்களின் நம்பிக்கையை மூலதனமாக்கும் அரசும் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள்,குறைந்தபட்சம் பாதுகாப்பு அளிக்ககூடவா முடியவில்லை..?

பகுத்தறிவையும் தாண்டி சில கேள்விகள் எழதான் செய்கின்றன.

அதீத கடவுள் நம்பிக்கை பத்தர்களே முதலில் நம்பிக்கையை நம்மிடமிருந்தே தொடங்குவோம், பின்பு எல்லைகளை கடந்து.

வெள்ளி, ஜனவரி 14

பொங்கல் வாழ்த்து




வான் பொய்தபோதும்
வயல் கொண்ட நீர்
வற்றிடா போதும்,
நித்தம் கலனி கண்டு
கிட்டிய கால் பங்கும்
உலக ஒட்டதின் ஒவ்வா
பயனாய் ஆன போதும்,
செய்திடுவோம் தீதுயின்றி
உலகம் உய்ய..


என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

செவ்வாய், டிசம்பர் 21

மக்களாட்சி=காங்கிரஸ்+தி.மு.க+நீரா ராடியா.



கடந்த சில மாதங்களாக பரபரப்பாக செய்திதாள்களில் இடம் பிடித்து இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்பெக்ட்ரெம் ஊழல் அதை தொடர்ந்து பாரளுமன்ற கூட்டதொடர் முடக்கபட்டது இவையாவும் ஜனநாயகம் என்பது சிலரின் விருப்ப,வெறுப்புக்களுக்கு உட்பட்டது என்பதனை நிருபித்துவிடது இந்திய போலி ஜனநாயகம்.வழக்கம் போல் எதிர்கட்சி ஆளும் கட்சியாகட்டும்,ஆளும் கட்சி எதிர் கட்சியாகட்டும் ஒருவருக்கொருவர் நியாப்படுத்திகொள்ள வசதியாக இந்திய பாமரனின் சகிப்புதன்மை அமைந்து விட்டது.

பாமர தொண்டன் அறியாமையால் தலைமை செய்யும் அனைத்தும் சரியானெதென்றும்,அவர்கள் செய்யும் ஊழல்களையும்,தவறுகளையும் நியாயபடுத்தி
பேசுவது வழக்கமாக்கிகொண்டதினால்,கோடிகளில் புரளும் பதவிகளாகி போனது மக்கள் பிரதினுத்துவம் மற்றும் வாரிசுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல அரசியல் என்பது நியாயபடுத்தப்பட்டுவிடது.

உலகம் போற்றும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி..ஸ்பெக்ட்ரெம்...காமென்வெல்த்...ஆதர்ஷ் குடியிருப்பு...மற்றும் நீரா ராடியா...டாடா...அம்பானி..இதுவாகதான் இருக்குமோ? வாழ்க ஜனநாயகம்...

வியாழன், ஜூலை 1

வாட்டாக்குடி இரணியனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு; ஜெயா தொலைகாட்சியின் 'கிரைம் டைரி'

அன்றைய பிரிக்கபடாத மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுகோட்டைக்கு அருகில் வடசேரி என்ற இடத்தில் காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே 5தேதியில் சுட்டு கொல்லப்பட்ட வாட்டாக்குடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் இவர்களை பற்றிய ஒரு சிறு தகவலாக ஜெயா தொலைகாட்சில் 'கிரைம் டைரி' என்ற நிகழ்ச்சியில் தொகுத்திருந்தனர்.இந்த பகுதியில் விவசாய தொழில் சார்ந்த மக்களை வாழையடி வாழையாக அடக்கி ஒடுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பண்னையார்களுக்கு எதிராக கொதித்தெழுந்து ஒத்த கருத்துடைய இளைஞர்களை பொதுவுடைமை என்ற உயர்ந்த தத்துவத்தின் கீழ் ஒருமுகபடுத்தி, போரடிய வாட்டாக்குடி இரணியன் என்ற மாவீரனை அதிகார மையம் வஞ்சகமாக 1950 மே 5 ல் சுட்டுக்கொன்றனர். வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான் ஓடை சிவராமன், இவர்களோடு இணைந்து போரடிய மற்ற தோழர்கள் பொதுவுடைமை இயக்க உயர்மட்ட குழு எடுத்த முடிவான மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து போரடி ஒடுக்கபட்ட மக்களுக்கு சுயமரியாதை வாழ்வை பெற்று தருவதென என்று எடுத்த முடிவால், அதிகார மையத்திடம் சரணடைந்த இளைஞர்கள் கடுமையான சிறைதண்டனைக்கு பிறகு வெளிவந்து தாங்கள் கொண்ட கொள்கையின் பிடிப்பால் மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு,நில சீர்திருத்த முறை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போரடி மாற்றத்தினை கண்டு இன்று வாழ்கையின் கடைசி கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரின் அனுபவத்தோடு ஜெயா தொலைகாட்சியில் அவ்வை மீடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர்.இது போல் நிகழ்சிகளுக்கு நேரம் வழங்கிய ஜெயா தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஒளி காட்சியை காண இங்கே சொடுக்கவும்.

சுதந்திர இந்தியாவில் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வினை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு சுயமரியாதை வாழ்வினை பெற்று தருவதற்காக போரடி இறந்த இவர்கள் ஏற்படுத்திய மாற்றம்,இப்பகுதியின் இன்றைய மக்களின் சுயமரியாதை வாழ்க்கையின் அடிநாதம் என்றே குறிப்பிடலாம்.வாட்டாக்குடி இரணியனின் நெருங்கிய சகாக்களில் எனது தந்தையும் ஒருவர் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன்.(நிகழ்சியின் க‌டைசியில் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.முருகையன்)

ஞாயிறு, ஜூன் 13

தலைமுறை கடந்த ஆம்பலாபட்டு சின்னங்கள்.

ஒவ்வொரு கிராமங்களும் தங்களுக்கென தனிதன்மையான கலாச்சாரம்,காலம் கடந்து நிற்கும் வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என பல சிறப்புகளை கொண்டுள்ளன.மண்வாசனை மாறாத என் கிராமத்து சில சிறப்புகளை இணையத்தில் இணைத்திட ஒரு வாய்பாக கருதி இதை பதித்துள்ளேன்.




தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் நினைவு தூண் (குடிக்காடு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)