Pages
வியாழன், பிப்ரவரி 10
வசூல் மழையில் திருச்சி விமான நிலையம்.
ஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்..
'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!!
உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்...
உன்னைய யாரு இங்க வரசொன்னது...
நீ என்ன வேலை பார்கிரே... ரெம்ப பேசுர....
சரி..சரி எவ்வளவு வச்சிருக்கே...கொடுத்துட்டு போ...
மேற்கண்ட அனைத்து வசனங்களும் ஏதோ மீன் கடையிலோ அல்லது காய்கறி கடையிலோ நடைபெருவது அல்ல..திருச்சி விமான நிலைய பயணிகள் வெளியேறும் வாயிலில் நின்று கொண்டு வசூல் வேட்டையில் (சத்தியமா பிச்சை இல்லிங்க!!) ஈடுபடும் சுங்க அதிகாரிகளிடம் சர்வ சாதரணமாக வெளிபடும் வார்த்தைகள்.
கடந்த இரண்டரை வருடங்களில் மூன்று முறை இதே திருச்சி விமான நிலையத்தின் வாயிலாகத்தான் சென்று வந்து உள்ளேன், ஆனால் இம்முறை பட்ட அனுபவமும், கண்ட காட்சிகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமல்லாது மேலும் தாங்களும் இவ் வாயிலை பயன்படுத்த கூடும்,ஆகவே நீங்கள் எச்சரிகையோடு எவ்வாரு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவே..
கொழும்பு விமான நிலையத்திலிருந்து தொடங்கிவிட்டுருந்தன நினைவுகள்...இப்போது அனைவரும் நமக்காக காத்திருப்பார்கள்..செல்ல மனைவி,அண்ணன்,அண்னி,
அத்தான்,அக்கா,எங்கள் வீட்டின் செல்ல வால், இவர்களை இன்னும் சில நிமிடங்களில் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சியோடு இறங்கிய வேகத்தில் முதல் ஆளாக நின்று பாஸ்போர்ட்ல் முத்திரைய பதித்துகொண்டு,அடுத்த கட்டத்திற்க்கு நகர அனைத்தையும் உள்ளே தினித்து விட்டு மறுமுனையை சென்று நின்ற போது,கவனமாக பரிசோதனை இயந்திரத்தை பார்த்து கொண்டிருந்தவர் என்னை பார்த்து அருகில் அழைத்து 'என்னங்க ரெண்டு வச்சிருக்கிங்க என்றார்!!' நான் 'சார்......'' என்றவாறே இழுத்த போது அருகில் இருந்த ஒருவர் 'எங்கிருந்து வர்ரீங்க..என்றார்'' நான் 'கல்ஃப்' என்றேன்..அவர் மற்றவரிடத்தில் 'சார் கல்ஃப்லேருந்து வர்ரவங்களுக்கு மூனுவரை...'' என்றார். தப்பித்தோம் இதை கண்ணில் காட்டினால்தான் நண்பனிடத்தில் மறக்கவில்லை என்று சர்டிபிகேட்டு கிடைக்கும் என்று நினைத்துகொண்டு நகர்ந்தேன்.அடுத்த கட்டத்தின் அபாயம் அறியாது.
முதலில் வந்திருந்தாலும் பகுதி நேரம் கொண்டு வந்த பொருளை மீட்டு கொண்டு போகவே சரியாக இருந்தது..எனக்கு பின்னால் அனைவரும் ஆவலோடு முண்டிகொண்டிருக்க நான் எனது உரிமையை விட்டு கொடுக்காமல் முன் நின்று அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியேற முனைந்தபோது.. நான் தள்ளிகொண்டு வந்த ட்ராளியை மறித்து ''நீங்க அங்க போங்க...''' என்றார்.எனக்கு புரிந்து விட்டது எனது ட்ராலில் இருந்த ப்லாஸ்மா டி.வி தான்
இதற்க்கு காரணமென்று. மூன்று கௌண்டர் இருந்தாலும் குறிப்பாக நடுவில் இருந்த கௌண்டரை நோக்கி போகுமாறு சைகை செய்யபட்டேன்.
நான் 'வணக்கம் சார்'' என்றேன்.
அவர் ' நீங்க கொண்டு வந்திருக்கிற L.C.D டி.விக்கு கஸ்டம்ஸ் கட்டனும் எப்படி...'' என்றவாரே இழுத்தார்.
நான் ''சார் இது குறைவான விலைக்கே வாங்கினது... என்றவாறே டி.வி வாங்கின விலைபட்டியலை அவரிடத்தில் காண்பித்தேன்.
அதிகாரி சற்று கோபமாக கணக்கீடு செய்து கொண்டு இருந்தார், அப்போது எனக்கு அருகில் வந்த மற்றொரு வெள்ளை உடையனிந்த அதிகாரி '' என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா...!! என்றவாறே இழுத்தார்.
நான் அவரிடத்தில் திரும்பி ''சார் நான் கொண்டு வந்திருக்கின்ற டி.வி ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் கூட மதிப்பு கிடையாது சார் பின்ன ஏன் சார்..''என்றேன். எனக்கு லஞ்சமாக அவரிடத்தில் பணம் கொடுக்க விருப்பமில்லை,லஞ்சம் கொடுக்காமல் வாழ பழகிகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான் ஆகவே அவரிடத்திலும் விலைபட்டியலை காண்பித்தேன்.
அவர் 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!! உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்...
இதையல்லாம் கவனித்துகொண்டிருந்த அந்த அதிகாரி சற்று கோபமாக அவரிடத்தில் ''விடுங்க சார் இவனுகளுகெல்லாம்... என்றார்.நிலைமை தீவரமாவதை உணர்ந்த நான் '' சார் உங்க அதிகாரியிடம் பேசனும் என்றேன்..'' அவர் என்னை பார்த்து ''ஏன்யா காலையிலேயே உயிர வாங்கிர..அப்படி ஒரமா நில்லு'' என்றார்,அங்கே சொல்லியும் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற அர்தத்தோடு.
ஒரமாக நின்றுகொண்டு என்னை சுற்றி என்ன நடக்கின்றது கவனிக்க தொடங்கினேன்.
என்னோடு முன்பு ''என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா... என்றாறே அந்த அதிகாரி ஒருவரை
கௌண்டர் முன் கொண்டு வந்து அவரிடத்தில் ''எவ்வளவு வைச்சிருக்கே..'' என்றார்.
அவர் ''சார் எங்கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு சார்...!!என்றார் பரிதாபமாக.
தொடர்ந்து ''திருச்சியெலதான் சார் இப்படி பன்றிங்க...'' சொல்லி முடிப்பதற்க்குள் அந்த மெல்லிய முருக்கு மீசை அதிகாரி கோபமாக அவரிடத்தில்
''உன்னைய யாருயா இங்க வரச்சொன்னது..'' இங்லாந்து ராணி இவர் தாத்தாகிட்டதான் இந்தியாவை எழுதி கொடுத்துட்டு போனது போல இருந்தது அதிகாரம்.
அந்த பயணிக்கு இதற்கு மேல் பேச இருப்பமில்லை என்று தெரிந்தது ''சார் ஆயிரம் வச்சிகிட்டு விடுங்க வெளில ஆளுங்க காத்துகிட்டுருப்பாங்க.. என்றார்
பரிதாபமாக, இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் கைமாரி.
இவரை போலவே வெள்ளை சீருடை அனிந்த மற்றஅதிகாரிகளும் வேக,வேகமாக பயணிகளை ஒரம்கட்டி சுங்க துறையின் பெருமையினை காப்பாறினர்(?)
''ஹெலோ..ஹெலோ...'' என்ற சத்தத்தை கேட்டு திரும்பி எனது கௌண்டரை கவனித்தேன்,
கௌண்டருக்குள் இருந்த அந்த அதிகாரி மற்ற ஒருவரிடம் எனது டி.வியை காண்பித்து ஏதோ கூறிகொண்டு என்னை அழைத்தார்,
சீருடையேதும் அனிந்திருக்கவில்லை அவர். அவரிடத்தில் ''சார் இந்த டி.வியை நான் வாங்கினது இருபத்திரெண்டாயிரத்துக்கு குறைவான விலை தான் பின்பு ஏன் சார் நான் சுங்கவரி கட்ட வேண்டும்'' என்றேன் பணிவாக.
அவர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வெள்ளை காகிதத்தில் நான் கொண்டுவந்த டி.வியின் கம்பெனி பெயர்,அதன் அளவு(LCD) ஆகியவற்றை காண்பித்து இதற்க்கு தாங்கள் மூன்றாயிறத்து அறநூறு கட்ட வேண்டும் என்றார். நான் எனது டி.வியின் விலை மற்றும் அதனுடைய மாடல் தாங்களுடைய வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளதிலிருந்து மாறுபட்டது என நான் டி.வி வாங்கின விலைபட்டியல் மற்றும் டி.வியின் மேல் எழுதப்பட்ட மாடல் (ப்லாஸ்மா) ஆகியவற்றை காண்பித்தேன்.
அவர் கட்டபஞ்சாயத்து கணக்காக ''சரி நீங்க ஆயிரத்து அறநூறு கட்டிட்டு போங்க..!! என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
நானும் சரி நாம கொடுக்கிற காசும் அரசாங்கத்துக்குதானே போகுது என்று அதற்கு மேல் ஏதும் பேசாமல் என்னுடைய பையிலிருந்து பணம் எடுத்து கௌண்டரில் இருந்த சுங்க அதிகாரியிடம் கொடுக்க முயன்றேன்.
அதுவரை அங்கு நடப்பதை கவனித்த அந்த அதிகாரி, கைக்கு கிடைக்கவேண்டிய பணமும் போகின்றது அதுமட்டுமல்லாது மேல் அதிகாரியிடம் செல்கின்றான் என்று கோபமாக
''இல்ல நீ இரண்டாயிரத்து ஐநூறு கட்டடிட்டு போ..'' என்றார்
நான் ''ஏன் சார் என்றேன்'' என்றேன்.
''நீ இரண்டு பாட்டில் கொண்டு வந்திருக்க பின்ன எல்லாத்தையும் திறந்து பார்கனும்...என்று
கூறிவிட்டு ஒரமாக நில்லுங்க என்றார் சாதரணமாக.
எனக்கு புரிந்து விட்டது அப்பட்டமாக அதிகார துஷ்பிரோயோகம்,ஒரு பொருப்பான சுங்க அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வாறு நடந்துகொள்வதோ...லஞ்சம் கொடுக்கவில்லை என கொண்டுவந்திருக்கும் டி.விக்கு அளவுக்கு அதிகமான சுங்க வரி மற்றும் மனஉலச்சல் அளிக்க கூடிய செயல்பாடு.. இனி இங்கு பேசி எந்த பயனுமில்லை,நமக்காக அனைவரும் ஆவலோடு வெளியில் காத்திருக்கிறார்கள் இரண்டுமணி நேரத்திற்க்கு மேலாக,ஆகவே கொடுக்க கூடிய பணமும் அரசாங்கத்திற்க்கு தான் போகின்றது என மனதிருப்தியோடு அவர் கேட்ட பணத்தினை கொடுத்து சுங்கவரி செலுத்திய பேப்பரினை பெற்று கொண்டு வெளியேறினேன்,
சென்னை விமான நிலைய அனுபவம்,மற்றும் நண்பர்களின் மூலம் கோவை விமான நிலைய அனுபவம் இவைகளுடன் ஒப்பிடும் போது திருச்சி விமான நிலைய வெள்ளை உடையனிந்த சுங்க அதிகாரிகள் அவர்களின் பொருப்புகளிலிருந்து விலகி பயணிகளிடம் வாயிலில் நின்று வெளிபடையாக லஞ்சம் பெருவதை காணுபோது, எங்கள் ஊருக்கு அருகில் கரம்பயம் மாரியம்மன் கோயில் உள்ளது அதன் வாயிலில் காவி உடையனிந்த நபர்கள் இதுபோல்தான் நிற்பார்கள், எனக்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லையென்றே தோன்றுகின்றது.
வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் தெரிவிப்பது யாதனில்;
உறவுகளிடத்தில் பொழைக்க தெரியாதவன்,உலகம் புரியாதவன் என்று திட்டுவாங்குவதற்க்கு பதிலாக சுங்க அதிகாரியிடம் 500-ய் கண்ணில் காட்டும்போது,அவர் பேண்டு பாக்கெட்டு வசதியாக தெரியும்படி திரும்பிகொள்வார், அப்போது அதன் உள்ளே தினித்துவிட்டு கம்பீரமாக வெளியேருவதா இல்லை என்னை போல நொந்து..நூடுஸ்.. ஆகி வெளியேரும் போதுகூட மனதில் ஏதோ ஒரு மூலையில் ஆத்ம திருப்தியோடு வெளியேருவதா என நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே.
4 comments:
அருமையான தகவல் தோழரே... என்னை போல் வெளிநாட்டில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு செல்லும் நண்பர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்... தொடந்து எழுதுங்கள்...
இந்தியாவில் 99 சதவிகிதம் அரசு ஊழியர்கள் இது போல பிச்சைக்கார தே.... பசங்கதான். சட்டதிட்டங்கள் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு தன் இஷ்டம் போல் கொள்ளை அடிக்கும் மந்திரிகள் ஏகபோகமாக நடமாடும் போது இவனுங்களை யார் தட்டிக் கேட்க முடியும்? எங்கே யாரைப் பார்த்தாலும் ஊழல் மயம்தான். நாமும் சளைக்காமல் இந்த முண்டங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்புறம் நாம் என்னத்தை எதிர்ப்பார்ப்பது?
(உங்கள் எழுத்துக்களை படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வண்ணத்தை மாற்றினால் படிப்பதற்க்கு வசதியாக இருக்கும். இல்லை என்றால் அயோக்கி சுங்க வரி அதிகாரிகளே மேல் என்றாகிவிடும்)
நன்றி
கிரே பேக்ரவுண்டில் வெள்ளை எழுத்துக்கள் என் மாதிரி வெள்ளெழுத்துக்காரர்களுக்கு வாசிக்க சிரமமா இருக்குங்க.
கண் ஒரேதா வலிக்குது. கொஞ்சம் வலைப்பக்கத்தின் நிறம் மாத்துங்களேன்.
பதிவு அருமை. இங்கே எல்லாம் அக்கிரமம்தான். எங்கேன்னு போய்ச் சொல்லி அழ?
கருத்துக்கு நன்றி.சிரமத்திற்க்கு மன்னிக்கவும்,விரைவில் மாற்றி விடுகின்றேன்.
கருத்துரையிடுக