வெள்ளி, ஏப்ரல் 23

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் II

இனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ?' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.


வருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது? வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(?) பேச்சாற்றலா?நினைவுகள் தொடரும்...

புதன், ஏப்ரல் 14

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் I

அனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்து!படர்ந்த! ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம்! என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.

பொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.

இன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

மல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு (?) பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.

சரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.நினைவுகள் தொடரும்...