திங்கள், டிசம்பர் 14

The untouchable country -யாகவா தொடர வேண்டும் என் பாரத தேசம்?


எத்தனயோ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சாதி எதிர்ப்பு இன்றும் அதன் தொடக்க நிலையில் தான் இருந்துகொண்டுருக்கின்றது,சமய சான்றோர்(வெகு குறைவு) மற்றும் பகுத்தறிவுவாதிகள் தொடங்கிய இந்த எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள் மட்டுமே காலம் காலமாக முன்னின்று இதனை ஒரு சமூக பிரச்சனையென்றும், தனிமனித சுயமரியாதையென்றும் கூறிவருகிறார்கள்.உண்ண உணவு,உடுத்த உடை, இருக்க இடம் என்ற நிலையிலிருந்து சுயமரியாதை வாழ்வும் என்கின்ற நிலைக்கு மாறி வெகு நாட்களாகின்றன.வளர்ந்து வருகின்ற பொருளாதர சூழ்நிலையில் தனி மனிதன் உணவு,இடம்,உடை இவையாவனவும் பெற்றுவிடமுடியும் என்ற நிலையிருந்தும் தான் பிறப்பால் இழிவுபடுத்தபடுகின்றோம்,சமூக கட்டமைப்பிலிருந்து ஒதுக்கபடுகின்றோம் என்ற நிலைவரும்போது எந்த எல்லைக்கும் சென்று பெற்றுக்கொள்ள முழு சுதந்திரம் உள்ளது,அதை தடுக்கவோ,எதிர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை.ஆனால் இந்த சாதி எதிர்ப்பு எங்கிருந்து தொடங்கபட வேண்டுமோ அங்கிருந்து தொடங்கப்படவில்லை.


பெருவாரியான இந்துக்கள் இந்த இழிநிலை விரும்பவில்லை மற்றும் அதிலிருந்து விடுபட தாங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்கின்றபோது அதை சரி செய்ய வேண்டிய பொருப்பு முழுமையாக இந்துக்களின் காவலன் என்றும்,சமய சான்றோர் என்றும்,பெருபான்மை இன மக்களுக்கு அரசியல் ஒற்றுமை மற்றும் ஆட்சி அதிகாரம் பெற்றுகொடுக்க போகின்றோம் என்று கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகளும் இதனை முழுபலத்தோடு எதிர்க்கவில்லை என்கின்றபோது என்னை போன்றவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கின்றது.இதைத்தான் இவர்கள் வருங்கால சந்ததியருக்கு கொண்டுபோக போகின்றார்களா? சிறு,சிறு வெவ்வேறான கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த இன குழுக்கலாக தனி தன்மையோடு வாழ்ந்து வந்த மக்களை இந்துக்கள் என்று அடையாளபடுத்தி,ஒருமுகபடுத்தி தமக்கென்று பழமையான கலாச்சாரம் உண்டென்றும்,அப்பனுக்கும்,குப்பனுக்கும் போர் நடைபெற்றபொழுது அருளப்பட்டது என்று கூறி எங்கள் கலாச்சாரத்துடன் ஒத்துபோகதை தினித்து இதுவும் நம் கலாச்சாரம் என்றார்கள் சரி ஏற்றுகொள்வோம் ஆனால் சுயமரியாதையுடனும் நாகரிகமாகவும் வாழ முயலும் மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்களை தொடர செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?.வீடியோ:கீற்று வலைதளம் மற்றும் தலித் மீடியா நெட்வொர்க்,சென்னை.


எங்கெல்லாம் இந்த வன்கொடுமை அரங்கேற்றபடுகிறதோ அங்கு மேல்சாதி என்று கூறிகொள்ளும் நபர்களால்தான் இது அரங்கேற்றபடுகிறது.தெரிந்தே விட்டுசெல்கின்றனர் தங்களின் சந்ததிக்கு இந்த சாதி பிரிவினையை.எத்தனை சட்டங்களும்,பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தோன்றி ஒரே சமுக கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு சாதி என்ற சொல்லை பயன்படுத்தி தான் உயர்ந்தவன் என்று சக மனிதனை இழிவுபடுத்துகின்ற வன்செயல் கூடாது என்றாலும் இவர்கள் மனம் மாற்றம் என்பது சற்று கடினம் என்றே கருததோன்றுகிறது.ஒவ்வொறு மதங்களும் தன் மக்கள் சிறப்பான சுயமரியாதை வாழ்வை வாழ அனுமதிக்கின்றன மற்றும் போதிக்கின்றன,ஆனால் இங்கு நாத்திகவாதிகளும்,பகுத்தறிவுவாதிகளும் மட்டுமே ஒங்கி குரல்கொடுக்கின்றனர்,இந்த நிலை மாறி சமயம் சார்ந்த கடும் எதிர்ப்பு குரலாக மாறும்பட்சத்தில் எங்கும் சமமான மாற்றம் ஏற்படும் என்றே கருதுகின்றேன்.


நாம் வேறுபட்டு நின்று இழப்பதற்கு பல காரணங்கள் உண்டாகலாம்,ஆனால் ஒன்றுபட்டு நிலைத்துநிற்க ஒரு காரணம் மாத்திரமே இருக்கும்.

வெள்ளி, நவம்பர் 27

'தோழர்கள்' நாடகம்.


எங்கள் மண் சார்ந்த சிறப்புகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் தோழர்களுக்கு என் Red salute.

வாட்டாகுடி இரணியன் அதிகமான தோழர்களை கொண்டது எங்கள் கிராமத்தில்தான்.குறிப்பாக
வெ.அ.சுப்பையன்,எஸ்.எ.முருகையன்,காசிநாதன் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் ஈர்ப்பால் அடக்குமுறை காலத்தில் செஞ்சட்டை தோழர்களுக்கு உறுதுனையாக நின்ற ஆம்பலாப்பட்டு கிராம மக்கள்.அடக்குமுறை காலத்தில் மேற்குறிப்பிட்ட நபர்களை காட்டிகொடுக்க சொல்லி கொடுமைபடுத்தியதை இன்றும் எங்கள் கிராமத்து பெரியோர்கள் நினைவு கூறுவார்கள்.

'அண்டிபிழைக்காமல் வெள்ளையருக்கு எதிராக போராடி மடிந்தாலும் வாழையடி வாழையாக
இந்த போர்குணம் தொடர்கின்ற வரலாற்றை நாம் புரிந்துகொள்ள முடிகிறது' மிக சிறப்பாக
கூறி இருந்தார்கள்.வெள்ளையருக்கு எதிராக மற்றும் இவர்கள் அடையாளபடுத்துகின்ற விசயங்களுக்கு ஆதரவாக நாம் வெளிபடுத்தின்ற போர்குணத்தை பாரட்டி பதிவுசெய்கின்றவர்கள் ஏனோ இவர்கள் மறுகின்ற அல்லது அடிமைபடுத்த முயல்கின்றதற்க்கு துணை போகின்றவர்களுக்கு எதிராக போர்குணம் வெளிபடுத்தும் போது அடக்கி,ஒடுக்க முயல்கின்றனர்.

எனக்கு சில நேரங்களில் வியப்பாக இருக்கும், வளர்ந்த நாகரிகம் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில் இருந்துகொண்டு நாம் எங்கேயோ சந்தித்த,சந்திக்கின்ற அல்லது வலைதளத்தில் 'poor indians' என்று தட்டிவிட்டு நாம் காணும் காட்சிகளையும் நம் மனம் ஏற்றுக்கொண்டு பிழைக தெரியாதவர்கள் என்றும், விதி என்றும் நாம் நமது பணிகளில் மூழ்கிவிடுகிறோம்.ஆனால் அன்றைய எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு
பொதுவுடைமைஇயக்க கொள்கைகளில் மீதிருந்த நம்பிக்கை, தன் பெற்றோர்,உறவுகளையும் தாண்டி அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்றனர். மேலாக தியாகி ஆறுமுகம் தன் தியாகத்தால் ஆம்பலாப்பட்டு பொதுவுடைமை இயக்க வரலாற்றில் நீங்காத இடம்பெற்றுக்கின்றார்.

தோழர் நாடகத்தை பற்றிய முழு விமர்சனம் கீற்று வலைதலத்தில் தமிழர் கண்ணோட்டம்
சிற்றிதழ் பகுதில் கணலாம்.

நன்றி: எனது கருத்துகளை பதிவு செய்த தமிழர் கண்ணோட்டம் சிற்றிதழ் மற்றும் 'தோழர்கள்' நாடகம் ஒர் அறிமுகம்(தந்தை பெரியார்)மூலமாக எனக்கு அறிமுகபடுத்திய தோழர்.தமிழவன்.

வெள்ளி, நவம்பர் 20

BAHRAIN NATIONAL MUSEUM.


COPPER -னால் செய்யப்பட்ட மயில் போன்ற உருவமுடைய
பறவையை BARBAR TEMPLE-ல் கண்டெடுக்கப்பட்டு BAHRAIN
MUSEUM-தில் காட்சிக்கு வைக்கப்பட்டுயுள்ளது.
மற்றும் சில படங்கள்.
புதன், அக்டோபர் 28

ஆம்பலாப்பட்டில் கடந்த 1955 முற்பகுதியில் சமீன் மற்றும் சாதி எதிர்ப்பு பற்றி திரு.எஸ்.எ.முருகையன் அவர்கள்.ஓளிகாட்சி பதிவு செய்யப்பட நாள் : மார்ச் 2002.

வியாழன், அக்டோபர் 15

வலைதளத்தில் படித்த சிறிய கதை, நல்ல செய்தி.

A blind boy sat on the steps of a building with a hat by his feet. He held up a sign which said: 'I am blind, please help.' There were only a few coins in the hat.A man was walking by. He took a few coins from his pocket and dropped them into the hat. He then took the sign, turned it around, and wrote some words. He put the sign back so that everyone who walked by would see the new words.


Soon the hat began to fill up. A lot more people were giving money to the blind boy.. That afternoon the man who had changed the sign came to see how things were. The boy recognized his footsteps and asked, 'Were you the one who changed my sign this morning? What did you write?'

The man said, 'I only wrote the truth. I said what you said but in a different way.'
What he had written was:
'Today is a beautiful day and I cannot see it.'

Do you think the first sign and the second sign were saying the same thing?Of course both signs told people the boy was blind. But the first sign simply said the boy was blind. The second sign told people they were so lucky that they were not blind. Should we be surprised that the second sign was more effective?

Moral of the Story: Be thankful for what you have. Be creative. Be innovative. Think differently and positively.

Invite others towards good with wisdom. Live life with no excuse and love with no regrets. When life gives you a 100 reasons to cry, show life that you have 1000 reasons to smile. Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear. Keep the faith and drop the fear.

Great men say, 'Life has to be an incessant process of repair and reconstruction, of discarding evil and developing goodness…. In the journey of life, if you want to travel without fear, you must have the ticket of a good conscience.'

The most beautiful thing is to see a person smiling…
And even more beautiful is, knowing that you are the reason behind it!!
!


My sincere thanks to,


Mr.Jahid Mujawar
Email: jahid.s.mujawar@ gmail.com

ஞாயிறு, அக்டோபர் 4

இலவசம்

நிர்வாணபடுத்தபடுகிறேன்
பராவயில்லை எனக்கு
இலவசமாக கோவனம்
கிடைத்ததே.

எங்கிருந்தோ எடுக்கபடவில்லை
என்னிடத்தில் எடுக்கப்பட்டது
எனக்கே இலவசமாக
அறிமுகபடுத்தபடுகிறது.

யாசிக்க மட்டும் பழக்கபடுத்தபட்ட
எனக்கு திறன் யோசிக்க மாத்திரம்
எங்கிருந்துவரும்.

பங்கிட்டபின் தெரிக்கும்
எச்சங்கள்-என் மீதும்
பட்டு தெரித்தன சில
இலவசங்களாய்.

புதன், செப்டம்பர் 30

வாழ்த்துக்கள்,தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு.

ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை நாளை 02.10.2009 தொடங்கபடுகின்றது என்று தோழர் கவிஞர்.செவ்வியன் (தலைவர் ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் சென்னை) மூலமாக அறியபொருகின்றேன்.நீண்ட காலத்திற்க்கு பிறகு இவ்வாறன நிகழ்சி நம் மண்ணில் நடைபெற இருக்கின்றது,என்னிடம் சில நண்பர்கள் எதிர்மறையான மற்றும் எப்பொழுதும் முன்வைக்கும் கருத்துக்களை தெரிவித்தார்கள்,அவர்களுக்கு ஒரே பதில் ஆம்பலாப்பட்டின் தலைமுறை மாற்றத்திற்க்கு முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு நாம் நம்முடைய ஆதரவினை கொடுப்போம் என்றேன்.

இருப்பினும் என்னுடைய கருத்துக்களை என் இடுகளம் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ளவிரும்பொகின்றேன்,இன்று நம்மை சுற்றியுள்ள கிராமங்களுக்குஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்கிகொண்டு இருக்கின்றோம், இம் மாற்றத்தினை ஏற்படுத்திய பொறுமை நம் முன்னோர்களையே சாரும் குறிப்பாக செஞ்சட்டை தோழர்களையே சாரும்.ஏனெனில் ஆம்பல் வரலாற்றில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்று கூறுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே இந்த அறக்கட்டளையை ஒருங்கினைத்தவர்களும்,நிதி அளிப்போர்களும் இயல்பாகவே வரவேற்றிறுப்பார்கள்.என்னைபோல நூற்றுகணக்கான இளைங்ஞர்கள் தரமற்ற கல்வி மற்றும் மொழி பிரச்சனைகளால் அவதிபடுகின்றோம்,நம் மண்ணை பொறுத்தவரை பொருள் தேடல் என்பது இடம்பெயர்ந்தது அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது.வசதிபடைத்தவர்கள் குடிபெயர்ந்தும்,நடுத்தர குடும்பங்கள் நர்சரி பள்ளிகளுக்கும் அனுப்பி போலியான வளர்ச்சிக்கு தயார்படுத்திகொள்கின்றனர். ஒரு சிறு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,நான் கடந்தமுறை விடுமுறையில் சென்றபோது கண்டது, விவசாய குடும்பம்,இரண்டுகுழந்தைகள்,ஆணொன்று,பெண்ணொன்று,தினமும் அதிகாலையில் எழுந்து நீரட செய்து,காலை சிற்றுண்டி மற்றும் அனைத்தும் செய்து காலை மணி 06.45 தயார்படுத்திடுவாள் நர்சரி பள்ளிக்கு அன்னை, ஆனால் பெண்ணோ அதுவாகவே தயார்படுத்திகொண்டு செல்லும் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு,இரண்டு குழந்தகளுக்கும் வயது வித்தியாசம் இரண்டுக்குள்தான் இருக்கும் என்று கருதுகிறேன்,நான் ஒரு நாள் அந்த அன்னையிடம் வினாவினேன் அதற்க்கு 'இவள் படித்து ஒன்றும் ஆகபோவதில்லை ஆனால் அவன் படித்தால் எங்காவது போய் எங்களை காப்பாற்றுவான்' என்று கூறி சென்றார்கள். இது நமது கிராமத்தில் மட்டுமல்ல பரவலாக காணபடுகின்ற சாதரண ஒரு நிகழ்வு. மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வு ஒரு சமூக பிரச்சனையாகவே கருதுகிறேன்.குழந்தை பருவத்திலேயே கற்ப்பிக்கபடுகிறது நீ இதற்க்கு தகுதியுடையவன், நீ இதற்க்கு மட்டும் தான் தகுதியுடையவள் என்று,

ஆலயங்கள் பல எழுப்பி அதில் தம் அடையாளங்களை பதித்தனர் நமது முன்னோர்கள்.இன்றும் அதைத்தான் செய்கின்றனர்,இதுவல்ல இன்றைய அவசியம்,விவசாயம் சார்ந்த உற்பத்தியினால் நிறைவு அடைந்தனர் நமது முன்னோர்கள்,ஆனால் இன்றைய நிலை பொருள் ஈட்டல் என்பது கிராமம் சார்ந்ததாக இல்லை,இடம்பெயர்ந்த அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது ஆகவே அதற்க்கு ஏற்றவாறு நமது இளைங்ஞனை தயார்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

ஒருமைக்கன் நான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.

வாழ்த்துக்களுடன்,

கண்ணன்.
பஹ்ரைன்.

சனி, செப்டம்பர் 26

ஆம்பலாப்பட்டு கல்வி அறகட்டளை நிதியளிப்பு கூட்டம்.

ஆம்பல் மன்றத்தின் ஆலோசகர் திரு. சக்திவேல் கண்டியர்

C.ராஜா சிதம்பரம். பொருளாளர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

K.S.M. மணிவேல். தலைவர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

19.09.2009 தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு.

அகதிகளாக வாழும் தமிழர்கள்?

சா. ஷேக் அப்துல்காதர்

First Published : 19 Sep 2009 11:56:00 PM IST

Last Updated :


வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் பல்வேறு காரணங்களால் தங்கள் பாஸ்போர்ட்டை இழந்து, சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக துபை, அபுதாபி, சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள் ஓரளவு நியாயமான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், உதவியாளர், தொழிலாளர், அலுவலக உதவியாளர் என பணிபுரியும் விசாவில் சென்ற அனைவரும் அங்கு பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்றால் கை நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடு பல லட்சம் செலவு செய்து செல்கின்றனர். அங்கு சென்ற பிறகு அனுபவிக்கும் இன்னல்களால் வேறுவழியின்றித் தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
வளைகுடா நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தநிலை இப்போது இல்லை. அங்கு பெருமளவில் கட்டுமானப் பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தினர். அங்குள்ள கடுமையான வெயிலில் கட்டுமானப் பணி செய்கின்றனர்.
வட்டிக்கோ, நகைகளை விற்றோ பணம் பெற்று அதன் மூலம் வேலைக்குச் செல்வோர் விசாவுக்காகச் செலவு செய்த தொகை கிடைக்கும் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், அந்நாட்டில் பணி செய்ய விசா வழங்கியவரிடமோ அல்லது அந்நாட்டு அரசிடமோ பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்.
அதன் பின்னர்தான் அந்நாட்டில் பணி செய்ய அடையாள அட்டை வழங்கப்படும்.
பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் திரும்பும்போது, பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் முதலில் மொழி பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆங்கிலம், இந்தி பேசத் தெரிந்திருந்தால் மட்டுமே வளைகுடா நாடுகளில் சாதாரணமாக வாழ முடியும். இல்லையெனில், மொழியைக் கற்கும் வரை சிரமம்தான். இருப்பினும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் தமிழர்கள் வேறு வழியின்றிப் பணிபுரிகின்றனர்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரில் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விடுகின்றனர். பலர் பணியில் சேர்ந்த நிறுவனம் பிடிக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.
அவ்வாறு பணி செய்பவர்களுக்கு மன்னிப்பு அளித்து அந்நாட்டு அரசாங்கம் அவர்களை சொந்த நாட்டுக்கு, அந்த நாட்டுச் செலவில் அனுப்பி வைக்கும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
தற்போது, வளைகுடா நாடுகளில் பாஸ்போர்ட் இன்றி தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியால், அங்கு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் கிடைத்த வருமானத்தில், தங்குவதற்கு இடம் இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரச்னையில் உள்ளவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டாலும், தேவையான உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அகதிகளாக வாழும் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி. தினமணி

வெள்ளி, செப்டம்பர் 25

எனது சிறிய முயற்சிக்கு உதவிய ஆம்பல் மன்றம் பகரின் மற்றும் நண்பர்கள்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் அரசின் உதவியோடு நடைபெற்று கொண்டுருக்கும் பள்ளி கட்டிட வேலைபாட்டிற்கு பகரினில் இயங்கிகொண்டுருக்கும் ஆம்பல் கல்வி வளர்ச்சி மன்றம் மூலமாக தினார் 50.000
மற்றும் கீழ்வரும் நபர்களின் மூலம் பெற்ற நிதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக செலவிடப்படும்.
  1. எஸ்.எ.எம்.கண்ணன் ----------------15
  2. சி.ராஜா சிதம்பரம் ------------------- 25
  3. கருணாநிதி ---------------------------20
  4. கரிகாலன் -----------------------------15
  5. அறிவழகன் ---------------------------05
  6. வெற்றிசெல்வன் ---------------------05
  7. சிவகுமார் ------------------------------05
  8. ராமமூர்த்தி ----------------------------05

புதன், செப்டம்பர் 23

ஈழம்

என் தேசத்துள் என்னோடு
பயணிக்கின்ற என் சக தேசிய
இனங்களே - ஒற்றை கேள்வி,
உங்களில் எந்த இனத்திற்கு
எதிரானவன் என் ஈழ தமிழன்.

எனையாழ்கின்ர என்னவர்களே
கூறுங்கள் எதைஇழந்து என்னவனை
காக்கபோகிறோம்,
வேண்டாம் இன்னொரு ஈழம்
என் தேசத்துள்,
தலைவாழ்ளில்லா தேசமாய்
என் பாரத மாத வாழமாட்டாள்.

படித்ததுண்டு,கேட்டதுண்டு என்
குல பெருமைதனை வேர்றவன்
என்னையாண்ட கதையினை தவிர.

சேர,சோழ,பாண்டிய வம்சம்
தமிழானாய் தனித்து இருந்ததால் தான்
கண்ணகிக்கு கோயிலும், காவேரி நீரும்
இன்னும் பெருமைகொள்ள ஏராளம்.

ஒரு வரலாறு என்னோடு வாழ்ந்த
அனுபவம் - சக தோழனை போல்
மாவிரனின் மரணம் - எல்லா
குடியிலும் ஈழத்திற்கு ஆள்
கேட்டான் அழ ஆளில்லை அவன் குடியில் ,
காகிதத்தில் எழுத படவில்லை - உன்
வரலாற்று அழித்துவிட - நாளை
என் சந்ததிக்கு சொல்வேன்
வாய் மொழியாக ,கதையாக, கவிதையாக
வேலுபிள்ளை பிரபாகரன் என்றொரு
வீர வரலாறு.

இந்தியாவில் போலீஸ்

ஆத்மா,

ஆம்
இறந்த பின்னும்
வாழ்கிறான் - ஏழை
இந்தியன்

நிறைவேறா
ஆசைகளுடன்.

மக்கள் ஆட்சி.

வாக்கு சாவடியை
வேகமாக வெளியேறினான்

இனாமாய் கிடைத்த ரூபாயில்
"மக்கள் ஆட்சி'யை பார்க்க.