தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. வீடு, டி கடையென ஒவ்வொரு இடங்ககளிலும் அதன் பாதிப்பு தெரிகின்றன. செய்திதாள்களும் அதன் பங்கிர்க்கு
அரசின் திட்டங்களை ஆதரிப்பது,விமர்சிப்பது என பல கட்டுரைகள்,செய்திகள் வெளியிடுகின்றன.
தமிழக அரசின் மதுனான கொள்முதல் மற்றும் அதன் பயனாளிகள்,மதுபான விற்பனையின் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடு என்ன..? புள்ளி விபரங்களோடு சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து சிறு தொகுப்பை ஜனசக்தி நாளிதழில் வெளியிட்டனர். சிறப்பான கட்டுரை என்பதினால், இதை எனது வலைபூவின் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஜனசக்தியில் வெளிவந்த அந்த கட்டுரையை
அப்படியே இங்கே பதிவு செய்து உள்ளேன்.
இந்தியாலேயே அதிக மதுபான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியுள்ளது தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சிக்கு முன்பு 10 மது ஆலைகள் பத்தாது என்று இப்போது 19 ஆக உயர்ந்துள்ளது. உற்ப்பத்தியாளர்களின் பெரும்பாலானவர்கள் தி.மு.கவினர் மற்றும் கருணாநிதி குடும்ப விசுவாசிகளே !
மதுபானத்தின் விலையில் பத்து சதவிதமே அதன் உற்பத்தி செலவாகும்.ஆக 90 சதவிகித லாபத்தில் விற்க்கபடும் மதுவில் அரசும் அதை உற்பத்தி செய்யும்
முதலாலிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர்.அதாவது பதினெட்டு ரூபாய்வுக்கு உற்பத்தி செய்யபடும் பிராந்தி ரூபாய் 380 - க்கு விற்க்கபடும்.
அ.தி.மு.க ஆட்சி முடிவடையும் தருவாயில் டாஸ்மாக்கின் விற்பனை 9800 கோடியாக இருந்தது.இப்போது விற்பனையின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு இரண்டு முறை விலை ஏற்றமும் செய்தார்கள்.அந்த வகையில் தற்போது விற்பனை குறைந்தது 30,000 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ இதில் பாதியைதான் கணக்கில் காட்டுகிறது.
ஏன்? என்ன நடக்கிறது? என்று விசாரித்தால் டாஸ்மாக் விற்பனையில் பாதி கணக்கில் வருகிறது.மீதி கணக்கில் காட்டாமல் கபளீகரம்மாகிறது.இந்த திருட்டு
லாபம் ஆட்சியாளர்களாலும் மது உற்பத்திளார்களாலும் பகிர்ந்து கொள்ளபடுகிறது. ஆக,மது விற்பனை லாபம் அரசு கஜானவிற்க்கு மட்டும்மல்ல, குடும்ப கஜானாவிற்க்கும்தான்!
அ.தி.மு.க ஆட்சியிலும் மது விற்பனையானது.ஆனால் லாபம் முழுமையாக அரசுக்கு வந்தது.அதேபோல் பார் நடத்துபவர்களிடமிருந்து வரியும் சரியாக
வசூல் செய்யபட்டது.இப்போது வரியே வசூலாவதில்லை - மாமூல்தான் வசூலாகிறது.மதுபான விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் எந்த உருபடியான
சமுதாய வளர்ச்சி திட்டமோ,நிரந்தர பலன் தரும் மக்கள் மேம்பாட்டு திட்டமோ செயல்படுத்தபடவில்லை.மக்களை பிச்சைகாரர்களாக்கி இலவசங்களுக்காக
கையேந்த வைப்பதே மதுபான விற்பனையின் சூழ்ச்சியாகும்.
மதிவில் கிடைக்கும் வருமான பெரும்பாலும் - ஏழை,எளிய நடுத்தர குடும்பங்களின் உணவு,உடை,கல்வி போன்றவற்றிற்கு பயன்படுத்தபடாமல் அக் குடும்ப தலைவர்களால் டாஸ்மாக்கில் கொடுக்கபடும் பணம் ஆகும்.மது பெருக்கத்தால் தமிழகத்தில் உள்ள லட்சகணக்காண குடும்பங்களில் நிம்மதி பறிபோய்,சண்டை,சச்சரவுகள் வலு பெற்றுள்ளன.
விதவை,பென்ஸன் பெரும் பெண்களில் பெரும்பாலானோர் குடித்துக்குடித்தே செத்துபோன கணவனின் மனைவிமார்கள்...!
இன்றைய தினம் இளைஞர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள், பெண்கள்... புதிதாகவும்,வேகவேகமாகவும் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி வருவதை தடிக்க தவறினால் நாளைய தமிழகம் மீள முடியாத அளவிற்க்கு சீரழிந்து விடும்.
மது விற்பனை அதிகரித்ததால் சாலை விபத்துகளும் அதிகரித்துவிட்டன. தமிழகத்தில் தினசரி சுமார் 40 பேர் சாலை விபத்துகளில் சாவதாக போக்குவரத்து
காவல்துறை தெரிவித்துள்ளது.
காந்திய அமைப்பான சர்வோதய மண்டல் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் நெல்லையில் ரெங்கபுரம் என்ற சிறு கிராமத்தில் உள்ள 400 தலித்து வீடுகளில்
398 வீடுகளில் உள்ளோர்க்கு 15 வயது சிறுவன் உட்பட மதுபழக்கம் இருக்கிறது. அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒருநாள் வருமானம் ஒன்றேகால்
லட்சமாக உள்ளது.
தர்மபுரி மாவட்டம் செக்கொடி கிராமதில் உள்ள 325 வீடுகளில் நடத்தபட்ட ஆய்வில் 35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகளை கணகெடுத்துள்ளனர்.
கணவன்மார்கள் அனைவரும் மதுவிற்க்கு பலியாகியுள்ளனர். ஒரு குடும்பத்திற்க்கு ஒரு நாளுக்கு இருவர் சம்பாதிக்கும் 400 ரூபாயில் 350 ரூபாய் மதுக்கடைக்கு சென்று விடுகிறது.
ஆம் ! தமிழக கிராமங்கள் மதுவில் மூழ்கி சீரழிகின்றன.
நன்றி : ஜனசக்தி நாளிதழ்.