ஞாயிறு, மார்ச் 21

காவேரி


காலம் தவறாத
நுறைகொண்ட
காவேரின் முதல்
துளி கண்ட
என் பாட்டண்
அள்ளிபருகி
ஆனந்தம் கண்டதாக
தந்தையின் பகிர்வு.

மாறிய பருவமும்
மறுக்கின்ற மனித
நேசமும் - அடிக்கொரு
ஆழ்துளை என்றானது.

பிரசவ கால
நினைவுகள்
பெண்களுக்கு
மட்டுமல்ல
என்
உடன்பிறப்புக்கும் தான்,
கலம் கண்ட
கதிர்களை
காணும்பொழுது.

காலம் கடந்தாவது
வந்துவிடு
வருடத்திற்கு
ஒருமுறை
உறிஞ்சப்பட்ட
என்
பூமியை
குளிர்விக்க
தாயே காவேரி.

படம்: இணையதளத்திலிருந்து .

1 comments:

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் அழைப்புக்கும் தவிக்கும் உள்ளங்களுக்கும் கருணை காட்ட பொங்கி வரட்டும் காவேரி.

கருத்துரையிடுக