நிர்வாணபடுத்தபடுகிறேன்
பராவயில்லை எனக்கு
இலவசமாக கோவனம்
கிடைத்ததே.
எங்கிருந்தோ எடுக்கபடவில்லை
என்னிடத்தில் எடுக்கப்பட்டது
எனக்கே இலவசமாக
அறிமுகபடுத்தபடுகிறது.
யாசிக்க மட்டும் பழக்கபடுத்தபட்ட
எனக்கு திறன் யோசிக்க மாத்திரம்
எங்கிருந்துவரும்.
பங்கிட்டபின் தெரிக்கும்
எச்சங்கள்-என் மீதும்
பட்டு தெரித்தன சில
இலவசங்களாய்.
1 comments:
அருமை. இதை ஒத்த எனது கவிதை:இல்லாதாரும் இலவசங்களும்
நேரம் வாய்த்தால் பாருங்கள்.
கருத்துரையிடுக