காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.
இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.
தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.
பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,
உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.
2 comments:
//தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.//
அறைகிற உண்மை வெகு அருமை.
/அறைகிற உண்மை வெகு அருமை/
கருத்துக்கு நன்றி மேடம்.
சகமனிதனை மனிதனாக கருதவேண்டும்,இதை தவிர்த்து கடவுளாக பார்க தொடங்குவதனால்
ஏற்படுகின்ற பிரச்சனைகள் ஒட்டுமொத்த நம்பிக்கைகளையே விமர்சனத்திற்க்கு உள்ளாக்கிவிடுகின்றது.
கருத்துரையிடுக