என் தேசத்துள் என்னோடு
பயணிக்கின்ற என் சக தேசிய
இனங்களே - ஒற்றை கேள்வி,
உங்களில் எந்த இனத்திற்கு
எதிரானவன் என் ஈழ தமிழன்.
எனையாழ்கின்ர என்னவர்களே
கூறுங்கள் எதைஇழந்து என்னவனை
காக்கபோகிறோம்,
வேண்டாம் இன்னொரு ஈழம்
என் தேசத்துள்,
தலைவாழ்ளில்லா தேசமாய்
என் பாரத மாத வாழமாட்டாள்.
படித்ததுண்டு,கேட்டதுண்டு என்
குல பெருமைதனை வேர்றவன்
என்னையாண்ட கதையினை தவிர.
சேர,சோழ,பாண்டிய வம்சம்
தமிழானாய் தனித்து இருந்ததால் தான்
கண்ணகிக்கு கோயிலும், காவேரி நீரும்
இன்னும் பெருமைகொள்ள ஏராளம்.
ஒரு வரலாறு என்னோடு வாழ்ந்த
அனுபவம் - சக தோழனை போல்
மாவிரனின் மரணம் - எல்லா
குடியிலும் ஈழத்திற்கு ஆள்
கேட்டான் அழ ஆளில்லை அவன் குடியில் ,
காகிதத்தில் எழுத படவில்லை - உன்
வரலாற்று அழித்துவிட - நாளை
என் சந்ததிக்கு சொல்வேன்
வாய் மொழியாக ,கதையாக, கவிதையாக
வேலுபிள்ளை பிரபாகரன் என்றொரு
வீர வரலாறு.
0 comments:
கருத்துரையிடுக