சனி, ஜூலை 9

விவசாய சங்க வைரவிழா மன்னார்குடி.

விவசாய சங்க தொடங்கபட்டதன் வைரவிழா இந்தியா முழுவதும் கொண்டாடபடுகின்றது,அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் மாநில விவசாய சங்க வைரவிழா 5 ஜூலை 20011-ல் மிக சிறப்பாக கொண்டாடபட்டது. தென்பறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீபந்தம் மேடையில் கொடுக்கபட்டு கொடியேற்றதுடன் விழா தொடங்கியது.பொதுவுடைமை இயக்கம் தொடங்கபடுவதற்க்கு முன் இந்தியாவில் ஏப்ரல் 11 - 1936 - ல் விவசாய சங்கம் கட்டமைக்கபடுகின்றது. இந்திய சுதந்திர போரட்டத்தோடு இணைந்து சமூக விடுதலைக்காவும் போரட தொடங்குகிறது விவசாய சங்கம்.

தொடக்ககாலம் விவசாய சங்கம் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டாலும் அதன் பணி நிலபிரபுக்களையும்,ஜமீந்தார்களையும்,ஜாதி முறைகளையும் எதிர்கொண்டு போரடிய பெருமை உண்டு.குறிப்பாக அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை பகுதில் இதன் பணி அளப்பரியது ,இன்றும் முழுமையாக விவசாயிகளின் நலன் சார்ந்த இயக்கமாக அதன் பணி தொடர்கின்றது.வைரவிழா கூட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த 23 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன, அதில் சிறபான குறிப்பிட்ட சில தீர்மானங்கள் கீழ்வருவன.





1) காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தக் கோருதல்.

     தமிழகத்தின் வேளாண் உற்பத்திக்கும்,குடிநீர் ஆதாரத்திற்க்கும் பெரும் அளவில் பயன்பட்டு வரும் காவிரி நீர் பிரச்சனை 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவருகின்றது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும்,கர்நாடகம் அதை நிறைவேற்றவில்லை.மத்திய அரசு பாரமுகமாக இருந்து வருகின்றது.எனவே மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தீர்ப்பை அமல்படுதிடவும் தீர்ப்பின்படி கர்நாடகத்திடம் தண்ணீர் பெறவும் நடவடிக்கை எடுப்பதோடு காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு கமிட்டி அமைத்திடல் வேண்டும். மேலும் முல்லைபெரியார்,பாலாறு பிரச்சனைகளில் தமிழகத்தின் நியாயத்தை எடுத்துரைத்து உரிமைகளை பெருவதற்கு தமிழக அரசு அவசர உணர்வுடன் மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்.



2) மின்சாரப்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்
 
     அனைத்து பயன்பாட்டிற்க்கும் மின்சாரம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.இன் நிலையில் மின் தடை என்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆற்றும் பாசனம்,ஏரி பாசனம் குறைந்து வரும் நிலையில் நிலத்தடி நீர் பாசனம் அதிகரித்துவருகிறது.மின் மோட்டார்களை இயக்கிட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை.குறைந்த மின் அழுத்தத்தால் மோட்டார்களை பயன்படுத்துவதும்,அடிக்கடி மின் தடை ஏற்படுவதுடன்,நீண்ட நேர மின் சார தடைபடுவதால் வேளாண் உற்பத்தி பாதித்து விவசாயிகள் அவதியுறுகின்றனர். சிறிய,நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் இதர பயன்பாட்டிற்க்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன.விவசாயத்திர்க்கு முன்னுரிமை அடிப்படையில் தட்டுபாடின்றி 20 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும்.அத்துடன் அனைத்து உபயோகங்கக்கும் தடையின்றி மின் சாரம் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த மின் மாற்றிகளை சீரமைக்காமல் மாதகணக்கில் விட்டுவைக்க
படுகின்றன.மின் துறையில் இத்தகைய நிர்வாக மெத்தனத்தை போகிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




3) எண்டோ சல்பான் பூச்சிகொல்லியை தடைசெய்க:

     எண்டோ சல்பான் பூச்சிமருந்து புற்றுநோய் உள்பட,தடுக்க இயலாத பல்வேறு உடல் பாதிப்புகளை விளைவிக்கும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இந்த கொடிய நஞ்சுள்ள மருந்தை உலகில் பல நாடுகள் தடை செய்துள்ளன.இந்தியாவில் கேரளா,கர்நாடக மாநிலங்கள் தடை செய்துள்ளன.உச்ச நீதி மன்றமும் தடை விதிக்க வேண்டுமென அறிவுறித்தியுள்ளன.ஆகவே மத்திய அரசு உடன் இதை முற்றாக தடைசெய்து அறிவித்திட வேண்டும்.




4) 60 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்ககோரி

      நாட்டின் உணவு தேவைக்காக உழைத்து சோர்ந்து போன நிலையில் வாழ்ந்துவரும் 60 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் முதியோர் ஒய்வு ஊதியமாக ரூ.2000 மாதம்தோறும் வழங்கிட வேண்டும்.



இது போல் 23 சிறப்பான தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டன.சிறப்பு பேச்சாளர்களாக ஆந்திரத்தை சேர்ந்த திரு.நாகேஸ்வர ராவ், இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் மற்றும் திரு.நல்லகண்ணு ஆகியோர் உரையாற்றினர். 


திரு.ந‌ல்ல‌க‌ண்ணு அவ‌ர்க‌ளின் உரை ஆடியோ கிளிக் செய்ய‌வும்.


வேளாண் விஞ்ஞானி ந‌ம்வாழ்வார் அவ‌ர்க‌ளின் உரை ஆடியோ கிளிக் செய்ய‌வும்.

0 comments:

கருத்துரையிடுக