வியாழன், ஜனவரி 28

'ஹிந்தி'யாகிய நானும் நண்பர் அப்துல் வாகிதும்.

இன்னும் ஒரு வருடம் மற்றும் சில மாதங்களே உள்ளன சட்டமன்ற தேர்தலுக்கு,மைனாரிட்டி அரசு (அதாங்க ஜெயா டிவில் சொல்லுவாங்களே!)ஆட்சி செய்துகொண்டுருக்கும் தி.மு.க வின் தலைவர் தன் ஆட்சி தொடர்ந்திட பல சவால்களை சந்தித்திட நேர்தது,இனமென்றும்,மொழியென்றும் கூறி வந்தவற்றையல்லாம் ஒருவாறு சமாளித்து தொடர்ந்துகொண்டுள்ளார்.ஆனால் செங்கோல் கைமாறும் நிலை தவிர்கமுடியாததாக ஆகிவிடது, ஆகவே அரியாசனத்தில் அமரபோகும் வாரிசுக்கு அறுதிபெருபான்மை என்றொரு...

அரசியல் வேண்டாம் எனவே விசயத்திற்க்கு வருவோம்...


என்னோடு அப்துல் வாகீட் என்ற இன்நாட்டு குடிமகன் பணிபுரிந்து வருகின்றார்.நேற்று மாலை நேரத்தில் மிக உற்சாகத்தோடு காணப்படவரிடம் என்ன விசயம் விசாரித்தேன்.திருமணமாகி மாத ஊதியம் B.D.700 - க்கு குறைவாக பணிபுரிபவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு
மாதமும் உதவிதொகையாக B.D.50 என்று கடந்த வருடம் அறிவித்து இருந்தார்கள்,நேற்று அந்த வருட பணம் முழுவதுமாக அவருடைய கணக்கில் வரவுவைக்கப்பட்டுருந்ததே அவருடைய உற்சாகத்திற்க்கு காரணம் என்று தெரிவித்தார்.நான் அவரிடம் இது என்ன ஆச்சரியம் எங்கள்
நாட்டில் அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டி மற்றும் இலவச அரிசி இது போல் இன்னும் ஏராளம் என்றேன் அப்பாவியாய்,அவர் கேட்க போகும் கேள்வியரியாது.


இருமுறை இந்தியா வந்து போனவர் நமது அப்துல் வாகீட்,கோவா மற்றும் மும்பை
போன்ற நகரங்களுக்கு (தப்பித்தேன் சென்னை வரவில்லை).அவர் சென்ற இடங்களில் எல்லாம்
பிச்சைகாரர்களும்,வயதானவர்களும் மற்றும் ஊனமுற்றோர்களும் சிக்னல்,ரோடு,ஒட்டல் வாசல் போன்ற இடங்களில் மிக பெருபான்மையாக பிச்சை எடுத்துகொண்டுப்பதை பார்திருக்கின்றார். 'இவ்வளவு நபர்கள் கவனிப்பாரன்றி தெருக்களில் பிச்சை எடுத்துகொண்டும்.வாழ்விடங்களை கூட
சரியான முறையில் அமைத்துக்கொள்ளமுடியாத மக்கள் வாழ்கின்ற நாட்டில்,சராசரி வாழ்கை நடத்தும் குடிமக்களுக்கு ஏன் இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி,அரிசி போன்ற இலவசங்கள்' என்றார்.தொடர்ந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் ஏதவொரு நாட்டிற்கு சென்று வருவராம், அங்கெல்லாம் காணமுடியாத சாலை இடர்பாடுகள் இந்தியாவில் அதிகம் ஆகவே 'இவ்வளவு தேவைகள் இருக்கும் போது ஏன் உங்கள் அரசாங்கம் இலவசமாக வாரி வழங்குகிறது' என்றார்.எனக்கு ஏன் இவரிடத்தில் கேள்வி கேட்டோம் என்றாகிவிடது.எப்பொதும் அதிக பேசமாட்டார் ஆனால் இன்று எங்கிருந்து வந்தது தெரியவில்லை மனிதர் ஆச்சரியபடவைத்துவிட்டார்.


அவர் என்னை ஒரு 'ஹிந்தி'யனாக மட்டுமே பார்த்தார்,(ஹிந்தி என்பது பொதுவாக இந்தியர்களை குறிப்பிடும் சொல் இங்கே)ஆகவே நான் அப்பாவிதமாக அவரிடத்தில் சொல்ல,அவர் சந்தித்த மும்பை மற்றும் கோவா அனுவங்களையும் இணைத்து என்னை பதில் சொல்லமுடியாத இக்கட்டான நிலைக்கு உட்படுத்தி விட்டார்.


மக்களை இலவசம் மட்டுமே எதிர்பார்த்து காத்துருக்கின்ற வாக்கு சீட்டு அரசியல் தான் இவர்களின் திட்டங்களில் மேலோங்கி
நிற்கிறதே தவிர,ஒரு வளமையான சமுக கட்டமைப்பை உருவாக்குவதில் இவர்களின் திட்டங்களில் இருப்பதாக தெரியவில்லை



மன்னராட்சி குடிமக்களை கெளரவமான முறையில் வாழ வைக்கிறது.மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு குடிமக்களை கூனிகுறிகி கையேந்த வைக்க முயல்கிறது.
-----------
படம்: சென்னையை சார்ந்த இனையதள படங்கள்.
-------------------------------------------------------------

மற்றும் இனையதள பிரபலங்கள் இலவசம் பற்றி எழுதிய கருத்துக்களையும்,கவிதைகளையும் கீழே இணைத்துள்ளேன்.

தினமனி தலையங்கம்: தகுதியானதா;தகுதியற்றதா.

தினமனி தலையங்கம்: நனவாகும் கனவுகள்

திருமதி.ராமலக்ஷ்மி(blog) : இல்லத்தாரும் இலவசங்களும்...

திரு.சஞ்சைகாந்தி (blog) : இலவச திட்டம் யாருக்கு பயன்.

3 comments:

PANNEER SELVAM சொன்னது…

very good post. But one thing i need to comment. atleast in tamilnau all people getting their food because of DMK govt.
be appy about as born in tamilnadu.

aambalsamkannan சொன்னது…

'very good post. But one thing i need to comment. atleast in tamilnau all people getting their food because of DMK govt.be appy about as born in tamilnadu.'

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பண்னிர்செல்வம்,நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்கள் உணவு இன்றி தவித்தார்களா என்ன?
1 ரூபாய்க்கு அரிசி கொடுத்துவிட்டு மற்ற பொருட்களின் விலையின் நிலை தாங்கள் அறியாதது இல்லை, சாதரண கிராமங்கள் முதல் கொண்டு எல்லா இடங்களிலும் டாஸ்மாக் எனும் சாரய கடைகளை திறந்து தினகூலி மற்றும் மாணவன் வரை சர்வ சாதரணமாக மது அருந்தும் பழக்கத்தினை மிகையாக தாங்கள் குறிப்பிடும் தி.மு.க அரசாங்கமே ஏற்படுத்தியது.மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை,அதை அவர்களாகவே வாங்கிகொள்ளும் சக்தியினை உருவாக்கி கொடுத்து கையேந்தும் நிலையை தவிர்க்க முயல வேண்டும், அதை தவிர்த்து ஆட்சியாளர்களின் சுயநலம் சார்ந்த மற்றும் குறுகிய மணபாண்மையோடு ஏற்படுத்துகின்ற இலவச திட்டங்களை எதிர்பது மட்டுமே என் இடுக்கையின் நோக்கம் நண்பரே.

என் மக்கள் அடிபடை தேவைகளை அவர்களாகவே சுயகெளரவத்துடன் பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையினை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவார்கள் எனில் என் மகிழ்ச்சி இரட்டிபாகும் நண்பரே.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

மிக அருமை .........

கருத்துரையிடுக